பால்மா விலைசூத்திரம் ; பால்மா 60 ரூபாவினால் அதிகரிக்கிறது..பால்மா விலைசூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் பால்மாவின்
விலை கிலோ  60 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 860 ஆக உள்ள 1 கிலோ பால்மா 920
ஆக அதிகரிக்க உள்ளதாகவும்  345 ஆக உள்ள 400 கிராம் பால்மா பக்கட் 370 ஆக அதிகரிக்க உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி கிடைத்த உடன் இந்த விலை அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பால்மா விலைசூத்திரம் ; பால்மா 60 ரூபாவினால் அதிகரிக்கிறது.. பால்மா விலைசூத்திரம் ; பால்மா 60 ரூபாவினால் அதிகரிக்கிறது.. Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5