மத்திய வங்கி கொள்ளைக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கும் தொடர்பில்லை என எவருக்கும் கூற முடியது !மத்திய வங்கி கொள்ளைக்கும்  பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கும் தொடர்பில்லை என எவருக்கும்
கூற முடியது என  கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இன்று (13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய வங்கி கொள்ளை பிரதமரின் வழிகாட்டலில் அவரது ஆசீர்வாதத்துடம் இடம்பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி கொள்ளைக்கும்  பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கும் தொடர்பில்லை என எவரும் கூற முற்படுவாரானால் அவர் சாரத்தை அணிந்து கொண்டு தலைக்கு கீழே நிற்க முயற்சிக்கும் ஒரு செயற்பாடு ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டும்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமைக்கான காரணத்தை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது, அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லையென, அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கி கொள்ளைக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கும் தொடர்பில்லை என எவருக்கும் கூற முடியது ! மத்திய வங்கி கொள்ளைக்கும்  பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கும் தொடர்பில்லை என எவருக்கும் கூற முடியது ! Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5