விபத்தில் உயிரிழந்த மாணவன் டில்ஷான் கானின் இழப்பை தாங்க முடியாது கதறி அழுத பிரதேச பெரும்பான்மை இன மக்கள்.


குளியாப்பிட்டி வீரபொக்குன  பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் மோட்டார்
சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.டில்ஷான் கான் என்ற பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயரிழந்துள்ளார்.

மாணவனின் ஜனாஸாவை  அவர் படித்த பாடசாலையில் வைக்க வேண்டும் நாங்களும் இறுதி அஞ்சலி செய்ய வேண்டும் என பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெரும்பான்மை இன நண்பர்கள் வேண்டுகோள் விடுத்து இறுதி  அஞ்சலி செலுத்தியதுடன் அவருடன் பழகியவர்கள்  அழுதது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இறுதிச் சடங்கில் பௌத்த பிக்குகள் மற்றும்  மௌலவிகள் உட்பட அனைவரும் இன, மத பேதமின்றி கலந்துக்கொண்டுள்ளனர்.

பலருடன் இனமத பேதமின்றி அன்பாக பழகும் பிரதேசத்தில் அனைவரின் அபிமானத்தையும்   பெற்றிருந்த கிராமத்து மக்கள் மத்தியில் அன்புக்குரிய சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார் இவரின் இழப்பு  தாங்க முடியாத இழப்பு  என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


தகவல் : http://gossip.hirufm.lk/31242/2019/03/dilshans-story.html
விபத்தில் உயிரிழந்த மாணவன் டில்ஷான் கானின் இழப்பை தாங்க முடியாது கதறி அழுத பிரதேச பெரும்பான்மை இன மக்கள்.  விபத்தில் உயிரிழந்த மாணவன் டில்ஷான் கானின் இழப்பை தாங்க முடியாது கதறி அழுத பிரதேச பெரும்பான்மை இன மக்கள். Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.