பலமும், அதிகாரமும் உள்ளதாகக் கூறுபவர்கள், முடிந்தால் தலதாமாளிகை பாதையை முதலில் திறவுங்கள்.


- ஜே.எம்.ஹபீஸ்-
பலமும், அதிகாரமும் தன்னிடம் உள்ளது என கூறுபவர்கள், யுத்தகாலத்தில் அவசர தேவைக்காக
மூடப்பட்ட கண்டி  ஸ்ரீ தலதாமாளிகை முன்பாகச் செல்லும் பிரதான பாதையை முதலில் திறந்து பொது மக்கள் நன்மை கருதி வாகன நெறிசலைக் குறைத்துக்காட்ட முடியும் என்று கண்டி மாநகர சபை உறுப்பினர் விக்னேஸ்வரன் (விஸ்வா) தெரிவித்தார் (12.3.2019)

.
கண்டி பேராதனைவீதி, மற்றும் வில்லியம் கொபல்லாவ வீதி என்பன ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டமை தொடர்பில் எழுந்த பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து கண்டி மாநகர சபையால் விசேட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. அவ் விவதத்தில் கலந்து  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்மேலும் பேசுகையில்-


 கண்டியில் வாகன நெரிசல் என்பது தீர்க்கமுடியாத புற்றுநோயாக மாறிவிட்டது. அதனால் கண்டியில் வாழும் மக்களும் இன்று கண்டிக்கு தினமும் வருகைதரும் இலட்சகணக்கான மக்களும் அவதி உருகின்றனர். இந்நிலையிலேயே மேற்படி ஒரு வழி பாதை அறிமுகம் செய்யப்பட்டது.


கண்டிக்கு புதிதாக நியமிக்கப்ட்டுள்ள ஆளுனர் மைத்திரி குணரட்ண மற்றும் மாநகர சபை முதல்வர் கேசரசேனநாயக்க ஆகியோர் பாதை மூடுவது திறப்பது போன்ற பலமும், அதிகாரம் தங்களிடம் இருப்பதாக சூளுரைத்து பலத்தஎதிர்ப்புக்கு மத்தியில் மேற்படி ஒருவழிபாதை ஏற்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் பொதுமக்கள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. இதை விட்டு விட்டு பலமும்,அதிகாரமும் உள்ளவர்கள் முதலில் மூடப்பட்ட ஸ்ரீ தலதாமாளிகைப் பாதையை திறவுங்கள். அதன் மூலமாக கண்டி நகரில் தற்போது நிலவும் வாகன நெரிசலை கணிசமான அளவு குறைக்கமுடியும் என்று கூறினார்.


அவர்மேலும் பேசுகையில் எமதுநாட்டின் மக்கள் 30 வருடம் யுத்தத்திற்கு முகம் கொடுத்த போதும் வடக்கு, கிழக்குக்கு வெளியே  உள்ளவர்களும்; பாதிக்கப்பட்டார்கள். மக்கள் பிரதி நிதி என்ற வகையில் அதனை நான் கூற விரும்புகிறேன். யுத்தத்தின் வெற்றியால் இலங்கை முழுவதும் உள்ள சகல இனத்தவரும் வெற்றியின் கூதந்திரத்தை அனுபவித்து வருகின்றார்கள் ஆனால் கண்டியில் வசிப்ப்பவர்களும், கண்டியிலிருந்து குண்டசாலை, மகியங்கன பாதையை பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யுத்தத்தின் விளைவாக உருவான பாதை நெறிசலில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனால் நாட்டில் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் ஏற்கனவே மூடப்பட்ட பல பாதைகன் திறக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ந்து அதனை அனுபவித்து வருகின்றார்கள் என்றே கூறவேண்டும்.


இது எந்தவித்தில் நியாயமாகும்? யுத்தத்தின் காரணமாக மூடப்பட்டபாதைதான் ஸ்ரீ தலதாமாளிகாவ பாதையதகும். ஆனால் யுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட சகல பாதைகளும் கொழும்பில் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. கண்டியில் மட்டும் ஏன் முடியவில்லை, அதை செய்ய காலம் கடந்துவிட்டதா?. இனியாவது உங்கள் பலத்தையும், ஆளுமையையும் பாவித்து புதியமாற்று வழிகளையாவது அறிமுகப்படுத்துங்கள் எனவேண்டுகின்றேன் என்றார்.
இன்னும் பலர் உரையாற்றினர்.
பலமும், அதிகாரமும் உள்ளதாகக் கூறுபவர்கள், முடிந்தால் தலதாமாளிகை பாதையை முதலில் திறவுங்கள். பலமும்,  அதிகாரமும் உள்ளதாகக் கூறுபவர்கள், முடிந்தால் தலதாமாளிகை பாதையை முதலில் திறவுங்கள். Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.