(வீடியோ) குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளம் மக்கள் கொழும்பில் ஆர்பாட்டம்.


-சப்னி அஹமட் -
புத்தளம், அருவைக்காடு பகுதியில் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கோரி  பல்வேறு
பட்ட பேரணிகளை புத்தளத்தில் மேற்கொண்ட மக்கள் இன்று (19) கொழும்பு, காலி முகத்திடத்தில் ஜனாதிபதியின் செயலகத்திற்கு முன் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் அருவைக்காடு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டும் அரசின் திட்டத்தை நிறுத்துமாறு கோரியும், மக்களை பாதுகாக்கும் கோரியே இந்த பேரணி தற்போது இடம்பெற்றுவருகிறதுடன்,  குறித்த பேரணி தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக பேரணியில் கலந்துகொண்ட குழுவொன்று அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்
.
குறித்த பேரணியால் கொழும்பு, காலி முகத்திடல் ஜனாதிபதி செயலக சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(வீடியோ) குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளம் மக்கள் கொழும்பில் ஆர்பாட்டம். (வீடியோ) குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளம் மக்கள் கொழும்பில் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.