4 வழக்குகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மீளப்பெற்றது. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வழக்குகளில் இருந்து விடுதலை.


பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4
வழக்குகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மீளப்பெற்றுக் கொண்டது.

இதனை தொடர்ந்து குறித்த 4 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (19) குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்குகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்ள பிரதான நீதவான் அனுமதி வழங்கியதுடன் பிரதிவாதியான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

2010 முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
4 வழக்குகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மீளப்பெற்றது. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வழக்குகளில் இருந்து விடுதலை. 4 வழக்குகளை  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  மீளப்பெற்றது. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வழக்குகளில் இருந்து விடுதலை. Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.