வடக்கில் போராடும் மக்களுக்காக நூற்றுக்கணக்கான தென் இலங்கை மக்களும் களத்தில் குதித்து போராட்டம்.


சுதந்திரத்தினமான இன்று கேப்பாபுலவு மக்கள் கறுப்பு  நாளாக கடைப்பிடித்து படையினர் அபகரித்துள்ள
  தமது காணிகளை கோரி பாரிய போராடடம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் .


705ஆவது நாளாக இன்றையதினம் தொடர் போராடடத்தை நடத்திவரும் மக்களுடன் இன்றையதினம் தென்பகுதியை சேர்ந்த சம உரிமை இயக்கத்தினரும் சிங்கள மக்களும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்து இராணுவ முகாம் முன்பாக கோசங்களை  எழுப்பி  கேப்பாபுலவு மக்களின் காணிகளை  விட்டு இராணுவம் வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் .


சம உரிமை இயக்கத்தினை சேர்ந்த சத்தானந்த தேரர் மற்றும் சஞ்சீவ பண்டார ,உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கேப்பாபுலவு மக்களின் காணிகளில் அமர்ந்துள்ள இராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை தங்கியவாறும் போராடடத்தில் ஈடுபடடனர்.



திடீரென நூற்றுக்கணக்கான தென்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமையால் அரச புலனாய்வாளர்களும் இராணுவத்தினரும் அவர்களை புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தியதோடு கண்காணிப்பிலும் ஈடுபட்டனர் .
- கேசரி -
வடக்கில் போராடும் மக்களுக்காக நூற்றுக்கணக்கான தென் இலங்கை மக்களும் களத்தில் குதித்து போராட்டம். வடக்கில் போராடும் மக்களுக்காக நூற்றுக்கணக்கான தென் இலங்கை மக்களும் களத்தில் குதித்து போராட்டம். Reviewed by Madawala News on February 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.