ஒழிக்கப்பட வேண்டிய பகிடிவதை !


மேலுள்ளவன், Senior வர்க்கம் கீழுள்ள Junior வர்க்கத்தினரை அடக்கியொடுக்கி அட்டகாசம்,அராஜகம்,
அட்டூழியம், அநியாயம் செய்து அவர்களது கண்ணீரிலும் துன்பத்திலும் தொடர் வலியிலும் இன்பம் காணும் தரம் கெட்ட செயல்

நற்பண்புகள் போதிக்கப்பட்டு அவற்றைக் கற்று நாளைய சமூகத்தின் வழிகாட்டிகளாக விளங்கவிருக்கும் உங்களது நிலையே இவ்வாறெனில் யார் மன நிம்மதியோடு தமது பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப நினைப்பார்?

உங்களது தாய், சகோதரி, சகோதரியின் பெண் பிள்ளைகளை வீதியின் நடுவில் ஒட்டுமொத்த சமூகமும் பார்க்கும் வண்ணம் அணியணியாக நிற்க வைத்து அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி அகம்/ புறம் மகிழ்வீர்களா!
நீங்கள் கற்க வந்ததை விட சீரழிய வந்திருப்பதை உலகுக்கு தெளிவாக காண்பித்துள்ளீர்கள்.


நீங்கள் பகிடிவதைக்கு உற்பட்டிருந்தால் உங்களுக்கு Ragging செய்த Senior களை பழிவாங்குங்கள். அதைவிட்டுவிட்டு கோழைகளாக Junior களை அடித்து காயப்படுத்தி மனதைப் புண்படுத்தி இன்பம் காணும் நீங்கள் என்ன பிறப்பு பிறந்தவர்களோ தெரியவில்லை.

பெண்களை மதித்து, உரிமைகள் கொடுத்து, நீதம் வழங்கி, ஆண்களினூடாக பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ள புனித இஸ்லாத்தில் இருந்து கொண்டு நீங்கள் செய்த செயல் இஸ்லாத்தை புறக்கணிதத்தற்கு சமம்.


துறை சார் கல்விகளை கற்பதற்கு முன் ஒழுக்கம், பண்பாடுகளை படித்து வாழ்வில் அமுல்படுத்துங்கள், இதனால் தான் முன்னைய அறிஞர்கள் ''அறிவு கற்பதற்கு முன் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்'' என்றும் '' யாருக்கு ஒழுக்கம் இல்லையோ அவர் பன்றியைப் போன்றாவார் என்றும் வலியுறுத்தி ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளித்துள்ளனர்.


உலகில் மாமேதையாக இருப்பினும் பண்பாடு இல்லையாயின் அவர் 0 பெறுமானத்திற்குக் கூட தகுதி பெறமாட்டார் என்பதை நினைவில் கொண்டு திருந்த முயலுங்கள். இப்பாசறையில் ஒழுக்கம் பெறாத நீங்கள் பெரியவர்காளான பின்பு '' வெள்ளம் அணையைக் கடந்த நிலை'' தான் ஏற்படும்.


உண்மையில் ஒரு இமாம் கூறியதைப் போன்று '' தந்தையை இழந்தவன் அநாதையல்ல மாறாக உண்மையான அநாதை யாரெனில் ஒழுக்கமில்லாதவனாவான்'' என்பதிலிருந்து நீங்கள் தரம் கெட்ட அநாதைகள் என்பது நிரூபணமாகின்றது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நீ வெட்கப்படவில்லையாயின் விரும்பியதை செய்துகொள்' என்பதற்கிணங்க வெட்கமில்லாத மிருகங்களை விட தரம் தாழ்ந்த வேலையை செய்யும் நீங்கள் உங்களால் அநியாயம் இழைக்கப்பட்ட அப்பெண்மணிகளிடம் மன்னிப்புக் கோருவது கட்டயமாகும் இல்லையேல் உலகில் எப்படி வாழ்ந்தாலும் உங்களுக்கு மன்னிப்பென்பது கிடையவே கிடையாது.


இது மாணவ சமூகத்திலிருந்து முற்றாக கலைய்யப்படுவதோடு இவ்வாறன மாணவர்களுக்கு தகுந்த நடவடிக்கையம் எடுக்க வேண்டும், அப்பொழுது தான் ஏனைய மாணவர்கள் படிப்பினை பெறுவார்கள்.


எழுதும் போது உணர்ச்சிகளை, வார்த்தைகளை கட்டுப்படுத்தி கவலையுடன் கூடிய ஆதங்கத்துடன் எழுதவேண்டியாயிற்று.

அல்லாஹ் தான் உங்களை நல்லொழுக்கத்தின் பால் இட்டுச்செல்ல வேண்டும்.

நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா
25/02/2019
ஒழிக்கப்பட வேண்டிய பகிடிவதை ! ஒழிக்கப்பட வேண்டிய பகிடிவதை ! Reviewed by Madawala News on February 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.