பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற சம்பவத்தில் மகிந்தானந்த அளுத்கமகேவின் மகன், UNP கொழும்பு கவுன்சிலர் உட்பட ஐவர் கைது.


கொழும்பு - பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து
பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே  மகன் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஐ.தே.க கொழும்பு கவுன்சிலர் துமிந்த ஆர்டிகல , ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் SP ஒருவரின் மகன் உற்பட ஐந்து பேரே கைதாகி உள்ளனர்.

இவர்கள்  குறித்த டிபென்டர் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்  உட்பட ஐவர்   ஆவர் .


குறித்த டிபெண்டர் வாகனம் நேற்று பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சி.சி.ரி.வி காணொளிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஊடாக பெலவத்தை, பெகோட பூங்காவில் இருந்து குறித்த டிபென்டர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

காயமடைந்தன போலிஸ் அதிகாரி கடுமையான தலை காயங்களுயக்கு உள்ளாகி சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற சம்பவத்தில் மகிந்தானந்த அளுத்கமகேவின் மகன், UNP கொழும்பு கவுன்சிலர் உட்பட ஐவர் கைது. பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற சம்பவத்தில் மகிந்தானந்த அளுத்கமகேவின்  மகன், UNP கொழும்பு கவுன்சிலர்  உட்பட  ஐவர்  கைது. Reviewed by Madawala News on February 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.