சர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று...


சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் ஒழிப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதானது இந்நாட்டின்
நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென 96 உலக கிண்ண வெற்றி அணியின் தலைவரும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்தார்.

கம்பஹா நிகழ்வில்  ஊடகவியலாளர்களினால் எழுப்பட்ட வினாக்களிற்கு பதிலளிக்கும் பொழுதே அமைச்சர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

விளையாட்டுதுறை அமைச்சர் மாறியவுடன் ஒரு இரவில் அனைத்தையும் சரி செய்ய இயலாதென்றார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நாம் உருவாக்கிய அரசாங்கத்தில் துரதிருஷ்டவசமான விளையாட்டு அமைச்சர்களும், அவ்வமைச்சர்ளை பாதுகாக்கின்ற கவசமான சூதாட்டகாரர்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து கிரிக்கெட் விளையாட்டை அழித்துவிட்டார்கள்.

இவ்விடயம் தொடர்பில் நாம் பல முறை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். பிரதம அமைச்சரிடமும் பல முறை எடுத்துரைத்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அழிவின் பலாபலன்களை தற்பொழுது நாம் அனுபவிக்கின்றோம். விளையாட்டு காட்டிகொடுப்புக்களில் சிக்கியுள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட் சபையானது விளையாட்டு காட்டிகொடுப்புக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகமொன்றை இலங்கையில் நிறுவ முயற்சிக்கின்றது.

இது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாகும். இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களே கிரிக்கெட்டையும் ஆண்டார்கள். அவர்களே இந்நிலைக்கு பொறுப்பு கூறவேண்டும். உலக கிண்ண கோப்பை கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிடுகையில் இச்சுற்று போட்டிக்கு தயாராகுவது இலகு காரியமல்ல.

எம்முடைய வீரர்கள் திறமையானவர்கள். எம்முடைய நிர்வாகத்தில் தான் பல பிரச்சினைகள் இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல்களின் பொழுது இவ்விடயம் தொடர்பில் முழுமையான அவதானத்தை செலுத்த எதிர்பார்த்துள்ளேன் என அமைச்சர் அர்ஜூன ரனதுங்க மேலும் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று... சர்வதேச கிரிக்கெட் சபை ICC நடை முறைப்படுத்த உள்ள விடயம், எமது  நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாட ஒன்று... Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5