மக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயற்சிக்கிறோம் - பிரதமர் ..



2019 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய  மொத்தக் கடனின் பெறுமதி 5,900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக
கணிக்கப்பட்டுள்ளது. இது நாங்கள் பெற்றுக்கொண்ட கடன் இல்லை. ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கடனுக்கான தொகையாக 2,600 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது. 

இது இலங்கை வரலாற்றில் அதிகூடிய தொகை. 51 நாட்கள் நிலவிய அரசியல் குழப்பநிலை காரணமாக இலங்கை பொருளாதாரம் பாரிய தளம்பல் நிலைக்கு முகம் கொடுத்தது. 

இலங்கை ரூபாவின் பெறுமதி 3.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 16 ஆம் திகதி வரை திறைசேரியில் 312.9 மில்லியன் வெளியேற்றத் தொகை பதிவாகியுள்ளது. 29.1 பில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரி மற்றும் 29.8 மில்லியன் பிணைமுறிகள் காணப்பட்டன. 

எமது வௌிநாட்டு நிதியீட்டம் 79,991 மில்லியன் டொலரிலிருந்து 6985.4 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்தது. 

சபாநாயகரே அந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு பாரிய செலவு ஏற்பட்டது. அந்த சுமையை மக்கள் மீது திணிக்காமல் செயற்பட நாங்கள் முயற்சிக்கின்றோம்.சில நாடுகள் எங்களுக்கு உதவ முன்வருகின்றன. இந்தியன் ரிசேர்வ் வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்தியவங்கிக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. 

அதேபோன்று சீன பண்டா பிணைமுறிகள் மற்றும் ஜப்பான் சாமுராய் பிணைமுறிகளிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சர்வதேச நாணயப் பேரவையிலிருந்து 1 பில்லியன் டொலர்களைப் பெறலாம் என நம்புகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனன்குடா துறைமுகம், மத்தளை விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் கொழும்பு கிழக்கு வாயிலை விற்று 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய ரிசேர்வ் வங்கிக்கு வழங்குவதற்கு சம்மதமா என பிரதமரிடம் கேட்க விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயற்சிக்கிறோம் - பிரதமர் .. மக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயற்சிக்கிறோம் - பிரதமர் .. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.