கந்தளாயில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் கால்நடைகள் இறப்பு விவகாரம்..


-எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் தற்போது பாரியதொரு பிரச்சினையாக
உருவெடுத்து வரும் கால்நடைகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில் கந்தளாய் சீனி தொழிற்சாலைகளில் காணப்படும் மாடுகளும் அதிகளவாக இறந்திருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறிற்கும் மேற்பட்ட  அதிகமான மாடுகளை கால்நடை வளர்ப்பாளர்கள் வைத்து பராமரித்து வருகின்றார்.

கடந்த சில மாதங்களாக கால்நடைகளின் அதிகரிப்புக் காரணமாக மேய்ச்சல் நிலப் பற்றாக்குறையால் சுமார் இருநூறிற்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திருப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் இந்நிலையால் மாடுகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில் இது விடயமாக எந்த வித நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் எடுக்கப் படவில்லை என கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அத்தோடு கந்தளாய் பிரதேச செயலகத்திலும், மிருக வைத்தியர்களிடம் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை அத்தோடு நேரில் சென்று பார்த்தது கூட இல்லையெனவும்சுட்டிக் காட்டுகின்றனர்.

இது விடயமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்குமாறும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாயில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் கால்நடைகள் இறப்பு விவகாரம்.. கந்தளாயில் பாரிய  பிரச்சினையாக உருவெடுத்து வரும் கால்நடைகள் இறப்பு விவகாரம்.. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5