ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.


ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன்
தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!
===============================

ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக சிலர் மனிதாபிமானமற்ற முறையில் ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தி ஒருவரின் ஆடைகளை கலைந்து மானபங்கப்படுத்திய கீழ்த்தரமான காரியத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஏறாவூர் ஐயங்கேனியை சேர்ந்த சகோதரர் ஷஹீத் என்பவரை சவுக்கடி எனும் இடத்தில் வைத்து அப்பிரதேச இளைஞர்கள் சிலர் பொல்லுகளால் தலையில் தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி அவரின் மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

சகோதரர் அப்துல் காதர் அவர்களை தாக்கி, ஆடைகளை கலைந்து மானபங்கப்படுத்திய நிகழ்வுடன் தொடர்புடையவர்வர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதற்குள் ஷஹீத் என்பவர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனையக்குறிய விடயமாகும்.

இந்த நாட்டில் 03 தசாப்தங்களாக தாண்டவமாடிய கோர யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுபீட்சம் மலர்ந்துள்ள சூழலில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமுள்ளது.

முஸ்லிம்களின் உணவுப்பழக்க வழக்கத்தில் ஆரம்பித்த இனவாத செயற்பாடுகள் இஸ்லாமியப் பெண்களின் ஆடை கலாசாரத்தில் கைவைத்தது மட்டுமல்லாது முஸ்லிம்களின் சொந்த இடங்களை அபகரிப்பதற்கும் துனிந்துவிட்டார்கள். இன்று முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகளை தீவைத்துக் கொழுத்தும் நிலைக்கு நிலமை மோசமடைந்துள்ளது.

அவ்வப்போது தோன்றி மறைகின்ற பிரச்சினைகளை அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பு உரிய முறையில் அணுகி பிரச்சினைகளுக்கு முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் கிடப்பில் போடுவதே விசமிகளின் விசமச் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.

சகோதரர் அப்துல் காதர் மீதான தாக்குதல் மற்றும் மானபங்கம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய காணி உத்தியோகத்தர் மயூரன் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியிருக்கும் ஏனைய 07 பேருடன் சேர்த்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் ஷஹீத் என்பவரை வழிமறித்துத்தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்ட சம்பவத்திற்கு காரணமான சவுக்கடி பிரதேச இளைஞர்களையும் உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

பல்லின சமூகம் ஒற்றுமையாக இரண்டறக் கலந்து வாழும் சூழலை சுடுகாடாக்கி இன முரண்பாடுகளை தோற்றுவிக்க முயலுகின்றவர்கள் மீது தயவு தாட்சணையின்றி தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் மூலமே இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை அரசு உணர்ந்து கொள்வதுடன், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் முறையான நீதியை நிலைநாட்டுமாறும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

இப்படிக்கு
எம். எப். எம் பஸீஹ்
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம். ஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.