ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு கூட்டம் குருநாகலில் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு கூட்டம் குருநாகலில் .


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு கூட்டம் குருநாகலில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) அன்று குருநாகலிலுள்ள வடமேல் மாகாண சபை கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் அன்றைய தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரைக்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு செயலாளர்,முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர், உயர் நீதிமன்ற சட்டத்தரணி  ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்தார்.


சமகால அரசியல் தொடர்பிலான விடயங்கள் இதன் போது பிரதான பேசுபொருளாக அமைவதோடு, கட்சின் எதிர்கால நகர்வுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்படவிருக்கின்றன. மு.கா எனும் மக்கள் இயக்கத்தை அதன் வேர்களை  கிராமங்கள் தோறும் ஸ்தீரப்படுத்துவது தொடர்பிலும் இங்கு பேசப்படவிருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தைரியமாக பேசியதோடு, சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள அரசியல் தளம்பல் நிலையில் ஜனநாயகத்தினை பாதுக்காக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு கூட்டம் குருநாகலில் . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயற்குழு கூட்டம் குருநாகலில் . Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5