இலங்கை ஜனநாயகம் மீண்டும் மக்களால் நிலைநாட்டப்பட வேண்டும்.


இலங்கை ஜனநாயகம் மீண்டும் மக்களால் நிலைநாட்டப்பட வேண்டும்.
உலகில் பெயரளவு அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி முறை கொண்ட நாடுகளில் கூட அவசர காலங்களில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருக்கின்றது.

உலகில் பல நாடுகளில் சிம்மாசன உரை மற்றும் வரவு-செலவு திட்டம் தோல்வி அடையும் போது அல்லது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அத்தோடு பாராளமன்றம் அதன் சமுர்தாயங்களை மீறினால் பாராளமன்ற அரசாங்கம் காணப்படும் நாடுகளில் பெயர் நாமத்திலுள்ள அரச தலைவருக்கும் நிலைமைக்கேற்ப அவர்களால் பாராளமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்த முடியும், ஆனால், இலங்கையில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இறையாண்மை மற்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரமில்லை என கூறுவது துரதிஷ்டவசமானதாகும்.


அதன்படி நாட்டில் எந்த ஒரு நிலைமை ஏற்பட்டாலும் பாராளமன்றத்தை கலைக்க முடியாது என கூறுவது எந்தளவு தர்க்கரீதியானதும் பாரதூரமான விடயம் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

உலகில் பதவிக்காலம் முடிவடையும் வரை எந்த ஒரு காரணங்களுக்காகவும் பாராளமன்றத்தை கலைக்க முடியாது என கூறும் ஒரே நாடு நோர்வே மட்டுமே. அந்த நாட்டில் எமது மேல்மாகாணத்தை விட குறைந்த அளவு மக்களே உள்ளனர்.இதனையே தான் அவர்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் கொண்டுவந்துள்ளனர்.இந்த விடயங்களை அவர்கள் ஏன் கொண்டுவந்தார்கள் என்பதனை அறிவதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன.


ஆனால், இலங்கையில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இறையாண்மை மற்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றில் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு இன்றி ஒரு போதும் இரத்துச்செய்ய முடியாது என 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தன்படியே இலங்கையின் இறையாண்மை மற்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்திரமற்ற நிலையில் காணப்படும் ஜனநாயக நாட்டினை மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவர காணப்படும் ஒரே ஒரு தீர்வு பொதுத்தேர்தலாகும்.எமது நாட்டின் அரசியல் அமைப்பின்படி இறையாண்மை அதிகாரம் காணப்படுவது பாராளமன்றத்துக்கல்ல,அந்த இறையாண்மை காணப்படுவது இலங்கை மக்களிடத்திலேயாகும்.அது மக்கள் வாக்கெடுப்பு மூலமே உறுதிப்படுத்தப்படுகிறது.

ஜனநாகத்தை மதிக்கும் மக்கள் இது குறித்து சிந்திப்பார்கள்.
நாம் இலங்கை மக்கள்.இலங்கை ஜனநாயகம் நமது.
BY: அப்துல் ரஷீத் முகம்மத்
இலங்கை ஜனநாயகம் மீண்டும் மக்களால் நிலைநாட்டப்பட வேண்டும். இலங்கை ஜனநாயகம் மீண்டும் மக்களால் நிலைநாட்டப்பட வேண்டும். Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5