மனோ , ரிஷாத் அமைச்சு பதவி ஏற்காமல் இருக்க விருப்பம் ; மனோ தகவல் வெளியிட்டார்..



புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை
என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை,தேவை ஏற்படின் தானும் அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அவரோடு  ரிஷாத் பதியுதீனும் அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக மனோ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கம் இல்லாத போது அமைச்சரவை 30 பேராக வரையறுக்கப்பட வேண்டும்

புதிய அமைச்சரவையில் சிலருக்கு ஏற்கனவே தாங்கள் பதவி வகித்த அமைச்சுக்களையே வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவைப் பட்டியலில் நேற்றிரவு இறுதியாக 32 பேர் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் மத்தியில் இதனை 30 ஆகக் குறைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை கோரியுள்ளார்.

இதன் போது, தானும் ரிசாத் பதியுதீனும் அமைச்சரவைப் பதவி அவசியமில்லையென தெரிவித்ததாக மனோ கணேசன் தெரித்துள்ளார்.. 

இதேவேளை மலிக் சமரவிக்ரமவும் பதவியின்றித் தொடர இணங்கியுள்ள நிலையில் அமைச்சரவை 30 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனோ , ரிஷாத் அமைச்சு பதவி ஏற்காமல் இருக்க விருப்பம் ; மனோ தகவல் வெளியிட்டார்.. மனோ , ரிஷாத் அமைச்சு பதவி ஏற்காமல் இருக்க விருப்பம் ; மனோ தகவல் வெளியிட்டார்.. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.