நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக JVP முன்வைத்த பிரேரணை.. UNP, மற்றும் TNA ஆதரவு வழங்கியது.


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு
வேளை பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்விலேயே குறித்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்திருந்தார்.

மேலும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி விடயங்களை கருத்திற்கொண்டே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டிய அவசியத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு குறித்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முறையினை ஒழிக்க JVP கொண்டு வந்த பிரேரணைக்கு UNP, மற்றும்  TNA ஆதரவு வழங்கி உள்ளது.
இன்னும் 27 பேரின் ஆதரவு கிடைத்தால் இதனை நிறைவேற்ற கூடிய நிலை ஏற்படும் என தெரிவிக்கபடுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக JVP முன்வைத்த பிரேரணை.. UNP, மற்றும் TNA ஆதரவு வழங்கியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக JVP முன்வைத்த பிரேரணை..  UNP, மற்றும்  TNA ஆதரவு வழங்கியது. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.