மத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது ?


எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)
சிரியாவில்  சர்வாதிகாரி பஷார் அல் அசத்துக்கு  எதிராக  2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட  மக்கள் எழுச்சி,
ஓர் ஆட்சி மாற்றத்துக்கான , அல்லது ஒரு முழுமையான ஆட்சி முறை மாற்றத்துக்கான ஆயுதப்போராட்டமாக பரிமாணம் பெற்று இன்று ஏழு ஆண்டுகளை எட்டியுள்ளது , இந்த  ஏழு ஆண்டு போராட்டம்     பல்வேறு கட்டங்களை  கடந்து பல்வேறு இழப்புகளையும் சுமந்துகொண்டு இன்றும் அதன் இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது   , மத்திய கிழக்கில் அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட   அமைதிபூர்வமான மக்கள் எழுச்சி சிரியாவிலும் ஏற்பட்டபோது  அந்த மக்கள் எழுச்சி    சர்வாதிகாரி பஷார் அல் அசத்தின் மூர்க்கமான அடக்குமுறை காரணமாக    ஆயுதப்போராட்டமாக  பரிணமிக்க நிர்பந்திக்கப்பட்டது .


  அடக்குமுறையில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு ஆயுத போராட்ட அமைப்புக்கள் கட்டமைக்கப்படுவது தவிர்க்கமுடியாதாகியது , அந்த சூழலில்  பல ஆயுதப்போராட்ட அமைப்புக்கள்   வேறுபட்ட நோக்கங்களுடன் உருவாகவும் ,உருவாக்கப்படவும் , உள்நுழையவும் காரணமாக மாறியது அப்படி உருவாகிய, உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் போராட்டம் ,  பல வேறுபட்டபோராட்ட  கட்டங்களை  கடந்து இழப்புக்களுடன் பயணித்து கொண்டிருக்கின்றது , ஆரம்பத்தில் இராணுவ பலத்தில் பலவீனமாக , பின்னர் இராணுவ பலச் சமநிலையிலும் அதன் பின்னர் இராணுவ வெற்றிகளையும் குவித்த இந்த விடுதலைப் போராட்டம் தற்போது பின்னடைவையும் , ஒரு தேக்க நிலையையும் சந்தித்துள்ளது. எகிப்து மக்கள் எழுச்சி வெற்றிபெற்றபோது  எப்படி மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்  இராணுவப் சதிப் புரட்சி மூலம் முடக்கப்பட்டு ஒரு அரசியல் தேக்க நிலையை அடைந்துள்ளதோ அதே மாதிரியான ஒரு இராணுவ தேக்க நிலையை சிரியாவின்  விடுதலைப் போராட்டம் அடைந்துள்ளது .


சிரியாவில் ஏற்றப்பட்டுள்ள  மிகப் bபாரிய இழப்புக்களை ஒரு பக்கம் வைத்திவிட்டு பார்த்தால்  சிரியாவின் மக்கள் எழுச்சியின் தற்போதைய நிலையும் , எகிப்து மக்கள் எழுச்சியின் தற்போதைய நிலையும் ஒப்பீட்டளவில் அவற்றின் அடைவுமட்டதில் சம தரத்தில்  உள்ளன ,  இதேவேளை அவற்றின் இழப்புகள் என்ற மட்டத்தில் அவை சமமானவை அல்ல அதாவது எகிப்தில் மக்கள் எழுச்சி  குறைந்த இழப்புகளுடன் அரசியல் தேக்க நிலையில் உள்ளது ,சிரியாவில் மக்கள் எழுச்சி மிகப் பாரிய இழப்புக்களுடன் இராணுவ தேக்க நிலையில் உள்ளது சிரியா இழப்பதத்திற்கு இனி ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இழந்துவிட்டது . ஆனால் இந்த இரு நாடுகளிலும் உள்ள மக்கள் எழுச்சியின்  இயக்கச்சத்திகள் மூர்க்கமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன .


எகிப்தின் சர்வாதிகாரி அப்துல் பதாஹ் அல் சீசியின்  சிறைகளில்  70 ஆயிரம் வரையான அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்  , ஆயிரக்கணக்கானவர்களுக்கு  எதிராக  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது , பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது , பெருந்தொகையானவர்கள்  நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளார்கள் மக்கள் எழுச்சியை   தூண்டும் அரசியல் சக்திகள் முடக்கப்பட்டுள்ளன , அவர்கள் மூர்க்கமான அடக்குமுறையை எதிர்கொள்கின்றார்கள் .  .மறுபுறத்தில் சிரியாவில் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் , சிறைகளில்   ஆயிரக்கணக்கானவர்கள்  அடைக்கப்பட்டுள்ளனர் , , பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு   எதிராக  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  சுமார் ஏழு இலட்சம் பேர்  நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளார்கள்.

விபரீதம் என்னவென்றால்  இரு நாடுகளிலும் அந்த நாட்டு மக்கள் விரும்பாத அதேவேளை பிராந்திய ,பூகோள மேலாதிக்க சக்திகளுக்கு தேவையவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு தொடராக பாதுகாக்கப்படுகின்றனர் , எகிப்தில் அமெரிக்காவுக்கும் , சயனிஸ சக்திகளுக்கும் பிராந்திய அறபு சர்வாதிகாரிகளுக்கும் தேவையானவர் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர் இதேபோன்று சிரியாவில் ரஷியாவுக்கும் ,ஈரானுக்கும் தேவையானவர் அதிகாரத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றார் , எகிப்திலும் , சிரியாவிலும் அந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் எதை விரும்புகிறார்களோ அவற்றை நடைமுறைக்கு கொண்டுவரக் கூடியவர்கள்   அதிகாரத்துக்கு வராமல் தடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர்  .

மத்திய கிழக்கிலும்,  முஸ்லிம் நாடுகளிலும் அந்த நாட்டு  முஸ்லிம்களின் பெரும்பான்மை விருப்பை பெற்ற  அரசாங்கமோ  அல்லது அரசியல் முறையோ அந்த மக்களை ஆள்வதை மேலாதிக்க  சயனிஸ முதலாளித்துவ , கம்யூஸிய சக்திகளும் அதன் அறபு சர்வாதிகார முகவர்களும்    அனுமதிப்பதாக இல்லை , முஸ்லிம் நாடுகளில் தலைவர்களாக சர்வாதிகாரிகள்  இந்த மேலாதிக்க சக்திகளினால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு   பாதுகாக்கப் படுகின்றனர் இதுதான் சவூதியிலும்  , எகிப்திலும் ,துபாயிலும் ,சிரியாவிலும் மட்டுமல்ல பல  முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்றுவருகின்றது .

இன்றைய உலகில் சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்களாக பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்களே கருதப்படுகின்றனர்  , கருத்துக்களை  வெளிப்படுத்தும் சுதந்திரம் , எழுதுவதற்கும், பேசுவதத்திற்கும் ,விமர்ச்சிப்பதத்திற்கும் , ஆதரிக்கவும் ,எதிர்க்கவும் உள்ள சுதந்திரம்  விரும்பும்  அரசியல் , பொருளாதார ,சமூக முறைகளை தெரிவு செய்வதற்கான சுதந்திரம்  விரும்பும் ஆட்சி முறையை , ஆட்சியாளரை தெரிவு செய்யும் சுதந்திரம் , மோசடிகளுக்கு அப்பால்  அரசியல் தலைவர்களை   தெரிவு செய்யும் சுதந்திரம்,  என்பன முற்றாக மறுக்கப்பட்ட மக்களாகவே இன்று முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்  .

எந்த மக்களை இஸ்லாம் விடுதலை செய்ததோ ,எந்த மக்களுக்கு தமது ஆட்சியாளர்களை நோக்கி கோள்விகேற்கும் சுதந்திரத்தை  வழங்கியதோ அந்த மக்கள் ,உலகில் சயனிஸ முதலாளித்துவ ,கம்யூனிச சக்திகளின் அறபு சர்வாதிகார முகவர்களினால் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் ,போலியான ஜனநாயகம் பேசும் மேற்கு நாடுகள், அரபு முஸ்லிம் நாடுகளில் முடிமுறை  ஆட்சியை ,சர்வாதிகார ஆட்சியாளர்களை பாதுக்கப்பதன் மூலம் முஸ்லிம்களின் சுதந்திரத்தை தமது சர்வாதிகார முகவர்களின் மூலமாக முடக்கிவைத்து தமது நலனை பேணிவருகின்றன ,முஸ்லிம் நாடுகளில் மேலாதிக்க  சக்திகளின் தலையீடு என்பது அந்த நாடு மக்கள் விரும்பும் ஒன்றை ஏற்றப்படுத்த ஒருபோதும் உதவவில்லை என்பதுடன்   இருக்கும் அரசியல்நிர்வாகத்தை  விடவும் மோசமான ஓர்  அரச நிர்வாகத்தை, அரசியல் முறைமையை   உருவாக்கி பாதுகாக்கும் காரியத்தைத்தான் செய்துவருகின்றன  என்பது அரபு மக்கள் எழுச்சி மீட்டும்  பாடமாகவுள்ளது.

  முதலாளித்துவ, கம்யூனிஸ  கொள்கைகள்  மனித நேயத்தில் இருந்து அந்த மேலாதிக்க சக்திகளை  தூரப்படுத்தியுள்ளது, அச் சடவாத  கொள்கைகள்  அவர்களை  மனிதனை, பிரபஞ்சத்தை,மனிதவாழ்கையை இலாபநோக்கில் மட்டும் பார்க்க பழக்கிவிட்டுள்ளது  .அவர்கள்  கொண்ட அந்த கொள்கைதான் அன்று ஆபிரிக்க மக்களை அடிமைகளாக பார்க்க வைத்தது ,அவர்கள்  குறித்த பூமியின் வளங்களை சுருட்டிக்கொண்டு அதன் மக்களை பசியாலும் ,பட்டினியாலும் , துன்பத்தாலும் கஷ்டப்பட விட்டார்கள்  , அவர்கள்  எங்கு சென்றார்களோ   அங்கு அழிவுகளை உருவாக்கினார்கள்  , எந்த நாட்டின் மீது அவர்கள் பார்வை  பட்டாலும்  அங்கு அழிவும் ,குழப்பமும்  விளைந்தது  எந்த பூமியினுள் அவர்கள்  நுழைந்தாலும் அந்த பூமியை அழித்தீதார்கள்  , அதுதான் அன்று, இன்றும்   இஸ்லாமிய தேசங்களுக்கும்  ஏற்றப்பட்டதும்  , ஏற்றப்பட்டுவருவதும் .

எந்தவொரு உணமையான மக்கள் எழுச்சியும் அடக்குமுறையால் ,சர்வாதிகாரத்தால் நிரந்தரமாக முடக்கப்பட்ட முடியாதது என்பதைத்தான் உலக வரலாறுகள்  எமக்கு மீட்டல் வகுப்பு நடாத்துகின்றன  , உலக வரலாற்றில் எழுச்சிகள் , புரட்சிகள் ஒரு சிலவற்றைத்தவிர ஓரே  தடவையில் வெற்றிபெற்றதாக காணமுடியாது பல்வேறு எழுச்சிகளும் பல பின்னடைவுகளை , தேக்கநிலையை  கண்டுள்ளது ஆனால் இறுதியில் அவை எழுச்சியின் நோக்கத்தை வெற்றிகொண்டுள்ளன  என்பதற்கு  உலகில் இடம்பெற்ற மக்கள் புரட்சிகள்  சாட்சியாக உள்ளன , ஆன்மா உள்ள  உண்மையான   புரட்சிகளாக இருந்தால் அந்த  புரட்சிகள் நீண்ட காலத்திற்கு உயிர் வாழும், ; 17 நூற்றாண்டு ஆங்கிலேய புரட்சி மற்றும் 18 நூற்றாண்டு பிரெஞ்சு புரட்சிகளும் இதைத்தான் கற்றுத்தருகின்றன .
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது ? மத்திய கிழக்கில் ஏற்பட்ட  மக்கள் எழுச்சிக்கு எந்த நடந்துள்ளது ? Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.