ஆசியாவின் உயர்ந்த கட்டடம் கொழும்பு தாமரைக் கோபுரம் திறக்கப்படும் திகதி.


ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம்
இம்மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது திறந்துவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


இந்த அடையாளச் சின்னமானது பகல் வேளைகளில் மாதிரமன்றி இரவுவேளைகளிலும் தெளிவாகத் தெரியும் வகையில் அணைந்து அணைந்து எரியக்கூடிய மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டதாக அமையவுள்ளது.

சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியில் குறித்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர் அல்லது 1153 அடிகள் ஆகும்.

இலங்கையின் அடையாளமாக அமையப்போகும் தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிட்ட பணத்தை 14 வருடங்களில் ஈடுசெய்ய முடியும் என இத்திட்டத்தைத் தயாரித்த பேராசிரியரின் சமிந்த மாணவாடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 14 வருடங்களின் பின்னர் ஈட்டப்படும் வருமானம் நாட்டுக்கு இலாபமாக அமையும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசியாவின் உயர்ந்த கட்டடம் கொழும்பு தாமரைக் கோபுரம் திறக்கப்படும் திகதி. ஆசியாவின் உயர்ந்த கட்டடம் கொழும்பு தாமரைக் கோபுரம் திறக்கப்படும் திகதி. Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.