பிரதமராக யாரை நியமிப்பது என்பது ஜனாதிபதியே தீர்மானிப்பார்!



உறுதியான அரசாங்கமொன்றினை அமைக்க பிரதான இரு கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை பிரதமராக நியமிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்ப இந்;நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

' இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்~ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது அரசியலில் பெரும் பிரச்சினைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இந்த தீர்மானம் வேறு எந்தவொரு தனிப்பட்ட சொந்தப் பிரச்சினைகளுக்காக எட்டப்பட்டவை அல்ல. முற்றிழுதாக, நாட்டின் நன்மை கருதியே இந்த தீர்மானம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை நாட்டையும், மக்களையும், தேசிய சொத்துக்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வளம் பொருந்தியதொரு நாட்டை கையளிக்;க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

குறிப்பாக, இன்று அரசாங்கத்;தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியிலுள்ள எமது அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், எதிர்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளன. 

உண்மையில் இவ்வாண்டு இறுதியை நோக்கி நகரும் இந்த வேளையில் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், குறைநிறப்பு திட்டங்களுக்காகவும் பாராளுமன்றத்தை அனுக வேண்டிய தேவை எமக்குள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் எந்தவிதமான பணத்தையும் யாருக்காகவும் அரசாங்கம் செலவு செய்ய முடியாது.  ஆனால், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எமக்கு செலவு செய்யும் அதிகாரம் இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பிரேரணைகளை சமர்ப்பித்து எமது நிர்வாகங்களை முடக்;கலாம் என்ற எதிர்கட்சிகள் நினைக்கின்றன.  அது சட்டரீதியான ஒரு செயல் அல்ல. இந்த அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் பாராளுமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. 

அவ்வாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கு விரோதமான எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. அதற்கு அவர் ஒருபோதும் ஆயத்தமாக இருக்கவே இல்லை. இந்த நாட்டை சிறந்ததொரு பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் தேவையாக இருந்தது. இதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரெனும் ஒருவரை பிரதமராக நியமித்து கடந்த 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமுல்படுத்தினால் அதற்கான ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்குவதாக தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.  

எனவே, ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரேனும் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வேளையில் ரணில் விக்கிரசிங்கவை பிரதமராக்குவதற்காக 113 ஆசனங்களை அவர் பெற்றிருக்கவில்லை. எதிர்கட்சியிலிருந்து ஒரு சிலரே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு விரும்புகின்றனரே தவிற எழுத்து மூலமாக இதுவரையில் அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை.  100 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்குவுக்கு ஆதரவாக இருக்;கின்றார்கள். அதேவேளை, 103 பேர் மஹிந்;த ராஜபக்~வுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.

ஆகவே, மஹிந்த ராஜபக்வை விட 113 ஆசனங்களை ஒருவர் பெருவராக இருந்தால் அவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளார். அத்துடன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலை மீண்டும் வாபஸ் பெறலாமா என்றும் அல்லது நீதிமன்ற தீர்ப்புக்;கு பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதா என்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் ஒரு நல்லதொரு தீர்மானத்தை எட்டவுள்ளோம்.  

யாரை பிரதமராக நியமிப்பது என்று கூறமுடியாது அந்த தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்கவேண்டும். வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தை கொண்டு இந்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் நாங்கள்; இடமளிக்க மாட்டோம்." - என்றார்.  
பிரதமராக யாரை நியமிப்பது என்பது ஜனாதிபதியே தீர்மானிப்பார்! பிரதமராக யாரை நியமிப்பது என்பது ஜனாதிபதியே தீர்மானிப்பார்! Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.