பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான ஒபெக் அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக அறிவித்தது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான ஒபெக் அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக அறிவித்தது.


பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பான Opec இல்  இருந்து கத்தார் வெளியேறுவதாக
திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய  பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பான ஒபெக் இல்  ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உள்ளது.


இந்த நாடுகளின் மீட்டிங் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் நடக்க உள்ளது. இந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 57 வருடமாக கத்தார் இந்த அமைப்பில் இருந்தது. இந்த அமைப்பு 1960ல் தொடங்கப்பட்டது. 1961ல் கத்தார் இதில் இணைந்தது. இந்த நிலையில் 2019 ஜனவரி 1ம் தேதியோடு இந்த அமைப்பில் இருந்து வெளியேற போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இதனால் கத்தார் நிறுவனம் ஜனவரியில் இருந்து 95 சதவிகிதம் எண்ணெய் ஏற்றுமதி செய்யாது. இந்த அமைப்பில் குறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு கத்தார்தான். இந்த நிலையில் மொத்தமாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதை நிறுத்த போவதாக கத்தார் அறிவித்துள்ளது.


கச்ச எண்ணெய் ஏற்றுமதியை கத்தார் குறைவாக செய்தாலும், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கத்தார்தான் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.

2019ல் இருந்து உலகின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முழுக்க முழுக்க இறங்க போவதாக தெரிவித்துள்ளது.

அதாவது எண்ணெய் ஏற்றுமதியில் எதிர்காலம் இல்லை என்று இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய போவதாக கூறியுள்ளது. 77 மில்லியன் டன்னில் இருந்து 110 மில்லியன் டன் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய போவதாக கத்தார் தெரிவித்துள்ளது.
 
ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் இருப்பதாக கத்தார் ஊடகங்கள் எழுதி வருகிறது. அதன்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் கத்தார் தனித்து விடப்பட்டதும், சவுதி அரேபியா கொடுத்த அழுத்தமும்தான் இதற்கு காரணம். இது பெரிய அரசியல் பிரச்சனையை உருவாக்க போகிறது என்கிறார்கள்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான ஒபெக் அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக அறிவித்தது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான  ஒபெக் அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக அறிவித்தது. Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5