மாவீரர் தினத்தை அனுஸ்டித்த இளைஞர்களின் வீடுகளிற்கு இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்.


-FAROOK SIHAN-
மாவீரர் தினத்தை அனுஸ்டித்த இளைஞர்களின் வீடுகளிற்கு இனந்தெரியாத நபர்கள்  விசாரணை
என்ற பெயரில் அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பான தீவகப்பகுதி சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் தென்மராட்சி மற்றும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற இளைஞர்களின் பெயர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் வீடுகளிற்கு பாதுகாப்பு தரப்பினர் என கூறிக்கொண்டு திரிபவர்கள் விசாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் தத்தமது பாதுகாப்பிற்காக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து தமக்கு உள்ள அச்சுறுத்தலை முறைப்பாடுகளாக பதிந்துள்ளனர்.

இவ்வாறான முறைப்பாடுகள் வடமராட்சி தென்மராட்சி தீவகம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.

அது மாத்திரமன்றி சில கொலைக்குற்றங்களுக்கும் இந்நிகழ்வில் அனுஸ்டித்த இளைஞர்களை  பாதுகாப்பு தரப்பினர் எவ்வித ஆதாரமும் இன்றி தொடர்புபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மாவீரர் தினத்தை அனுஸ்டித்த இளைஞர்களின் வீடுகளிற்கு இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல். மாவீரர் தினத்தை அனுஸ்டித்த இளைஞர்களின் வீடுகளிற்கு இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல். Reviewed by Madawala News on December 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.