Breaking... இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்ஜயாவின் பந்து வீச்சு முறை சட்டவிரோதம் என ICC அறிவித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டார்.


இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்ஜயாவின் பந்து வீச்சு முறை  சட்டவிரோதமாக
இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC  இன்று அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பந்து வீச்சில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவர் பந்து வீசும் முறை  மதிப்பீடு  விதிகள் கட்டுப்பாட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி  மதிப்பீட்டு  அளவை தாண்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி விதிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்ட 11.1 வது விதிமுறைக்கு இணங்க , சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை படி தனஞ்சய  சர்வதேச போட்டிகளில் விளையாட தடை என்றாலும்  ,

ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் ஒப்புதலுடன், 11.5 வது பிரிவு படி, தனஜ்சய  இலங்கை  உள்நாட்டு கிரிக்கெட்டில் நடக்கும் போட்டிகளில் பந்து வீச முடியும்.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனஞ்சய தொடர்பில்  சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அகில தனஞ்சய ,  விதிமுறைகளின் 4.5 வது பிரிவுக்கு இணங்க அவரது பந்துவீச்சு நடவடிக்கைகளை மாற்றிய  பிறகு மீண்டும் மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என ICC மேலும் தெரிவித்துள்ளது.
Breaking... இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்ஜயாவின் பந்து வீச்சு முறை சட்டவிரோதம் என ICC அறிவித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டார். Breaking... இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்ஜயாவின் பந்து வீச்சு முறை  சட்டவிரோதம் என ICC அறிவித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டார். Reviewed by Madawala News on December 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.