இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள்.. தற்போது வரை உள்ள லேட்டஸ்ட் அப்டேட் ஒரே பார்வையில்..


நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.
இந்நிலையில்
கட்சித் தலைவர்களுக்கு இடையிலா விஷேட கூட்டம் சற்றுமுன்ன சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

அதேவேளை கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் , நாடாளுமன்ற அமர்விலும் கலந்து கொள்ள ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மற்றும் அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இவற்றில் கலந்துகொள்ள சுமார் 19 நாட்களின் பின்னர்,
ரணில் விக்ரமசிங்ஹ அலரி மாளிகையிலிருந்து இன்று பாராளுமன்றம் செல்கிறார்.

அதேவேளை இவற்றில் கலந்துகொள்ள மஹிந்த ராஜபக்‌ஷவும்  பாராளுமன்றம் வந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தில் JVP நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்கிறது.
எனினும் அது இன்று தோற்கடிக்கப்படும் என்றே தெரிகிறது.

மேலும் பாராளுமன்றில்  பிரதமர் ஆசனம் மகிந்த ராஜபக்சவுக்கு ஒதுக்கபட்டு இருக்கும் என தெரிவிக்கபடுகிறது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்.

தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் பாராளுமன்றை அடைந்துள்ளனர் .
Published Time 9:40 AM
இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள்.. தற்போது வரை உள்ள லேட்டஸ்ட் அப்டேட் ஒரே பார்வையில்.. இன்றைய  பாராளுமன்ற நிகழ்வுகள்.. தற்போது வரை உள்ள லேட்டஸ்ட் அப்டேட்  ஒரே பார்வையில்.. Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.