எஸ்.எம்.கலீல், கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு போராட்டம்.

மொஹொமட்  ஆஸிக் - ஜே.எம்.ஹபீஸ்-
நாடாளுமன்றத்தை களைத்ததையும்  புதிய பிரதமரா   மஹிந்த ராஜபக்ஷவை  நியமித்ததையும் எதிர்த்து பூஜாபிட்டிய பிரதேச சபையின் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம்.கலீல்   இடம் பெற்ற அதன் மாதாந்த கூட்டத்தின் போது கருப்புப் பட்டி அனிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

  13 ம் திகதி காலை பூஜாபிட்டிய பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் அதன் தலைவர் அனுர பிரநாந்து அவர்களது தலமையில் ஆரம்பமானது. 


பகல் 12 மணி அளவில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ் . எம். கலீல் அவர்கள் எழுந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் காலம் முடிவடைய முன் பாராளுமன்றத்தை கலைத்ததையும்   நாட்டில் ஒரு பிரதமர் இருக்கும் போது புதிய பிரதமர் ஒருவரை நியமித்ததையும் எதிர்த்து கருத்து தெரிவிக்க தொடங்கியதுடன் சபையில்  அமலி துமலி ஏற்பட்டது. 


அன் நேரத்தில்  ஐ.தே. க உறுப்பினர்  எஸ்.எம். கலீல் கருப்பு படி ஒன்றை கழுத்தில் அனிந்து  தமது எதிர்ப்பெ  வெளி படுத்தினார். 

அதன் பின் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனி உறுப்பினர்  சம்பத் தர்மப்பிரிய மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் அனுர மடலுஸ்ஸ ஆகியோர்  அவரது கருப்புப்  பட்டியை  எடுத்து கிழித்து  கலீல் அவர்களது குற்றச் சாட்டை எதிர்த்து  தமது கைகளில்   கருப்பி படி அனிந்து தமது  எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.


இச் சந்தர்ப்பத்தில் சபையில்  பாரிய சலசலப்பு ஏற்பட்டதுடன் உறுப்பினர்கள மத்தியில் வாக்கு வாதங்களும் இடம்பெற்றன.


 இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி  உறுப்பினர்   உவைஸ் ரஸான், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் எதிர் கட்சி தலைவருமான எம்.பீ. ரம்சான் மொஹமட் ஆகியோரும் உரையாற்றி தமது கருத்துகளை தெரிவித்தனர்.
எஸ்.எம்.கலீல், கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு போராட்டம். எஸ்.எம்.கலீல்,  கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு போராட்டம். Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.