கிழக்கில் வெள்ள அபாய பாதிப்பு : எதுவித பேதங்களும் இன்றி நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி ? முன்னாள் முதல்வர் கோரிக்கை.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கில் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக தொடரும் அடைமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளஅபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இடங்களில் நிவராணப்பணிகளைமேற்கொள்ளுவதற்கு எதுவித பேதங்களும் இன்றி ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- 

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கின்றது.குறிப்பாக திடீரென ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் தேக்கநிலை இருப்பதை அவதானிக்க முடிகிறது.

தற்போது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிக அளவு மழைவிழ்ச்சி பதிவாகியுள்ளதென இந்த மாவட்டங்களில் உள்ள அனர்த்து முகாமைத்துவ நிலையங்களின் தரவுகளில் மூலம் இருந்து அறியமுடிகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், வாகரைபாசிக்குடா, வாழைச்சேனை, உன்னிச்சை, பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, மைலாம் பாவெளி, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், செங்கலடி, கிரான் போன்றபகுதிகளும் - அம்பாறையில் பொத்துவில். திருக்கோவில்,லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேணை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை போன்றபகுதிகளும் - திருமலையில் கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை நகர், மூதூர்,போன்ற பலபிரதேசங்கள் வெள்ளஅபாயத்துக்குள் சிக்குண்டுள்ளன. 

இப்பிரதேசங்களில் உள்ள தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்குள் வாழ முடியாத அவலத்தை எதிர் கொண்டுள்ளனர்.பலவீடுகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. மக்கள் இடம் பெயர்ந்து தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பகுதிகளில் காலதாமதமின்றி துரிதகதியில் நிவாரண பணிகளைமேற் கொள்ளவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்கவேண்டும். இதில் கட்சிபாகுபாடுகள் இன்றி அணைத்து தரப்பினரும் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் - என்றார்.
கிழக்கில் வெள்ள அபாய பாதிப்பு : எதுவித பேதங்களும் இன்றி நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி ? முன்னாள் முதல்வர் கோரிக்கை. கிழக்கில் வெள்ள அபாய பாதிப்பு : எதுவித பேதங்களும் இன்றி   நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி ? முன்னாள் முதல்வர் கோரிக்கை. Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.