ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, தெல்தோட்ட கோவிலில் தேங்காய் உடைத்து ஆர்பாட்டம்.


ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, இன்று தெல்தோட்டை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு தெரிவித்தும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜ​ரட்ணம்,சாந்தினி கோன்ஹாகே, தெல்தோட்ட பிரதேசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

தெல்தோட்ட முத்துமாரியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டுடன் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி தெல்தோட்ட நகரின் தனியார் பஸ் தரிப்பிடத்தில் நிறைவடைந்ததுடன், இங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, தெல்தோட்ட கோவிலில் தேங்காய் உடைத்து ஆர்பாட்டம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, தெல்தோட்ட கோவிலில் தேங்காய் உடைத்து ஆர்பாட்டம். Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5