இலங்கையின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தினமாகியுள்ள வெள்ளிக்கிழமை சென்டிமென்ட்.


இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது.


இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இன்றைய தினம் ஒரு தீர்மானமிக்க நாளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளிலேயே நிகழ்ந்துள்ளமையினால் இன்றைய தினமும் ஒரு தீர்மானமிக்க சம்பவம் இடம்பெறும் என பல தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஆரம்பமாக கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார்.

அதேநாளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.  பல்வேறு வடிவங்களில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.

இந்த நெருக்கடிகளை தீர்வு காணும் நோக்கில் கடந்த 9ம் திகதியான வெள்ளிக்கிழமை அதிரடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட நீதிக்கான புரட்சியில் ஆளும் தரப்புக்கு  பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் 16ம் திகதியான இன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையான இன்று ஒரு புரட்சி நடக்கும் என அரசியல் தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பினரால் நம்பப்படுகின்றது.

இன்றையதினம் 1.30 மணியளவில் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது  நம்பிக்கையிலான தீர்மானத்திற்கு வாக்கெடுப்பினை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக இன்றைய தினம் பிரதமர் பதவியில், அமைச்சரவையில், அரசாங்கத்தில் எதுவும் மாற்றம் வருமா.. அல்லது  நடப்பு அரசாங்கம் தொடருமா என மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.


இலங்கையின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தினமாகியுள்ள வெள்ளிக்கிழமை சென்டிமென்ட். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தினமாகியுள்ள வெள்ளிக்கிழமை சென்டிமென்ட். Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.