பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலக்கீழ் பதுங்கு குழிகளை உடைக்கும் பணிகள் ஆரம்பம்.


கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக்
கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்கு குழிகளை உடைக்கும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் குறித்த பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

14 SLNG படைபிரிவின் கட்டுப் பாட்டில் இருந்த இவ் பதுங்கு குழியே இவ்வாறு உடைக்கப்படுகின்றது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த பதுங்கு குழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர்.

எனினும் அது இவ்வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அதனை உடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரிய போது அனுமதி வழங்கப்படவில்லை .

மேலும், இந்த பகுதி இராணுவத்தினரின் வசமுள்ள நிலையில், பதுங்குகுழி அகற்றப்படுகின்றமையால் குறித்த காணி விடுவிப்பிற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலக்கீழ் பதுங்கு குழிகளை உடைக்கும் பணிகள் ஆரம்பம். பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலக்கீழ் பதுங்கு குழிகளை உடைக்கும் பணிகள் ஆரம்பம். Reviewed by Madawala News on November 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.