ஒரு உயிர் போனாலும் ஜனநாயக போராட்டத்தை கைவிடப்போவதில்லை



இரண்­டா­வது நாளா­கவும் பெரும்­பான்­மையை காட்­ட­மு­டி­யாமல் வெளி­யே­றிய மகிந்த வெட்­க­மி­ருந்தால் கேட்டுப் பதவி வில­க­வேண்டும். சண்­டி­யர்­களை கொண்­டு­வந்து பாரா­ளு­மன்றை கைப்­பற்ற முடி­யாது. ஒருவர் பின் ஒருவர் மர­ணித்­தாலும் ஜன­நா­ய­கத்­துக்­கான போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மான குறிப்­பிட்டார்.


சூதாடும் ஒரு­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யதை நினைத்து வெட்­கப்­ப­டு­கின்றோம். சீட்­டாட்­டத்தில் தற்­போது அவர் ஜோக்­கர்­களை மாத்­தி­ரமே கையில் வைத்­துக்­கொண்­டுள்ளார். எமக்கு எதி­ரான துரும்­பு­களை தன்­னிடம் வைத்­தி­ருப்­ப­தாக கூறிய ஜனா­தி­ப­திக்கு, பாரா­ளு­மன்­றிலும், நீதி­மன்­றிலும், மக்கள் முன்­னி­லையும் எமது துரும்பை காட்­டி­யுள்ளோம் எனவும் மேலும் அவர் தெரி­வித்தார்.


நீதி­மன்­றிலும், பாரா­ளு­மன்­றிலும் கிடைக்­கப்­பெற்ற ஜன­நா­யக வெற்­றியை கொண்­டாடும் வகையில் கொழும்பு, லிப்டன் சுற்­று­வட்­டத்தில், ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வெற்­றிக்­கூட்­டத்தில்  கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,


சட்­ட­வி­ரோ­த­மான ஆட்­சி­ய­மைத்தால் நாம் விட்­டுக்­கொ­டுத்து விடு­வோ­மென தப்­புக்­க­ணக்கு போட்­டு­விட்டார். 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­தவே ஜனா­தி­ப­தியை பத­வி­யேற்­றி­யது. அவர் பின்­க­த­வினால் மகிந்­தவை ஆட்­சிக்கு கொண்டு வந்­ததும் நாம் பயந்­து­கொண்டு விட்­டுக்­கொ­டுத்து விடுவோம் என நினைத்­து­விட்­டனர்.


ஜன­நா­ய­கத்தை விட்­டுக்­கொ­டுக்க நாம் மடை­யர்கள் அல்ல. ஜனா­தி­ப­தி­யுடன் நீண்ட பயணம் செல்­ல­வி­ருந்தோம். ஆனால் அதற்கு தற்­போது சாத்­தி­ய­மில்லை. சண்­டித்­த­னத்தை கண்டு ஓடி ஒளியப் போவ­தில்லை. உயிர்த்­தி­யாகம் செய்­தா­யினும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டுவோம். இரண்­டா­வது நாளா­கவும் பெரும்­பான்­மையை காட்­ட­மு­டி­யாமல் வெளி­யே­றிய மகிந்த வெட்கமிருந்தால் கேட்டு பதவி விலகவேண்டும். சண்டியர்களை கொண்டுவந்து பாராளுமன்றை கைப்பற்ற முடியாது. உங்கள் சண்டித்தனத்தினால் ஒருவர் பின் ஒருவர் மரணித்தாலும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுக்க போவதில்லை என்றார்.

-Vidivelli

ஒரு உயிர் போனாலும் ஜனநாயக போராட்டத்தை கைவிடப்போவதில்லை ஒரு உயிர் போனாலும் ஜனநாயக போராட்டத்தை கைவிடப்போவதில்லை Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.