மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் !


ஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்நாளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள்  பயனுள்ளதாக அமைத்துக்
கொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ஒருவனது சன்மார்க்கத் தெளிவுக்கு ஆதாரமாகும் என்ற பொருள் பட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை கவனத்திற்கொண்டு எமது குத்பா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். குத்பாவுக்கு சமுகமளிப்போரில் நோயாளிகள். வயோதிபர்கள் மற்றும் பிரயாணிகள் முதலியவர்கள் காணப்படுகிறார்கள் என்பதை நாம் கவனதிற்கொள்ள வேண்டும்.

இந்த மாதங்களில் லுஹருக்குரிய பாங்கின் நேரம் நேரகாலத்தோடு இருந்து வரும் அதே வேளை பாங்கு சொல்லப்பட்டு சுமார் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்கப்படும் குத்பா ஒரு மணி வரை நீடிப்பது எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலர் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே குத்பாக்களை அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள கதீப் மார்கள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்களும் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

மேலும் குத்பாவுக்கு வருகை தரும் காரியாலயங்களில் தொழில் புரிவோர்களதும்; அரச உத்தியோகத்தர்களதும் பகல் போசனத்திற்கும், ஜுமுஆ தொழுகைக்குமான நேரத்தை கவனத்திற் கொள்வது கதீப் மார்களின் கடமையகும். ஆதலால் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துபவர் ஜுமுஆவில் கலந்து கொள்ளும் மக்களின் வசதிகளையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்  க.பொ.த (சாஃத) பரிட்சைக்குத் தோற்றும்  மாணவர்கள் குறித்த நேரத்தில் பரிட்சைக்கு செல்லவேண்டிருப்பதால் குத்பாக்களை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் கதீப்மார்கள் கவனத்திற்கெடுப்பது முக்கியமாகும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முறையீடுகளையெல்லாம் முன்வைத்து இந்த ஊடக அறிக்கை கதீப் மார்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படுகின்றது.


அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் ! மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் ! Reviewed by Madawala News on November 29, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.