பாராளுமன்றம் இன்று காலை 10.30 க்கு கூடுகிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பாராளுமன்றம் இன்று காலை 10.30 க்கு கூடுகிறது.


பாராளுமன்ற அமர்வு இன்று (29) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதேவேளை, பாராளுமன்ற அமர்வுக்கு இன்றும் பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நுழையும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற உள்ள கட்சித்லைவர்கள் கூட்டம் மற்றும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதா இல்லையா என இதுவரையிர் தீர்மானிக்கவில்லை என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 க்கு கூடுகிறது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 க்கு  கூடுகிறது. Reviewed by Madawala News on November 29, 2018 Rating: 5