ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதை கைவிட வேண்டும் .


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதை
கைவிடவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,


வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் தமது கல்வித் தகைமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி சாத்வீக போராட் டங்களை நடத்திய வேளையில் அதனை முன்னாள் பிரதமர் ஒரு பொருட்டாக கருத்தில் கொள்ளவில்லை.

கொட்டும் மழையிலும், எறிக்கும் வெயிலிலும், நுளம்புக் கடிக்கு மத்தியிலும் இரவு பகல் பாராது சுமார் 2 மாத காலம் வடக்கு, கிழக்கிலுள்ள முக்கிய நகரங்களில் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்தை மலினப்படுத்திய முன்னாள் பிர தமரை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டியது அனைவரதும் கடமையாகும்.


இதேவேளை, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபசும் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாற்பத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஒரே தினத்தில் பொருத்தமான வேலைவாய்ப்பை வழங்கி சாதனை படைத்ததுடன் அதற்கும் அப்பால் வெளிக்கள கடமைகளை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்களுக்கு மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் களை வழங்கினார்.


ஆனால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது தடுத்து வைத்துள்ள கைங்கரியத்தை யும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே மேற்கொண்டார். இதற்கும் அப்பால் முப்பத்தி ரெண்டுக்கும் மேற்பட்டதமிழ் இனப் படுகொலையை மேற்கொண்டு சாதனை படைத்தவர் ரணில் விக்கிரமசிங்க.


அத்தோடு தமிழ் மக்க ளின் போராட்டத்தை சிதைத்த குள்ளநரியாகவும் ரணில் விக்கிரமசிங்க இருந்தார் என்ற வரலாற்றை மறந்துவிடமுடியாது. எனவே, இராமன் ஆண்டால், என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை யில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலைவகிக்க வேண்டும் என்று வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாங்கள் கோரிக்கை விடுக்கின் றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதை கைவிட வேண்டும் . ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதை கைவிட வேண்டும் . Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.