முதல் டெஸ்ட்டில் 211 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இலங்கை.


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து
அணி 211 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் 97 ஓவர்கள் வரையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 462 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
முதல் டெஸ்ட்டில் 211 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இலங்கை. முதல் டெஸ்ட்டில்  211 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இலங்கை. Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5