14 ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றியே தீருவோம். மங்கள சூளுரை.


ஜனாதிபதி நீதிமன்றம் மட்டுமன்றி மக்கள் நீதிமன்றுக்கும் பதில் கூறவேண்டும் என்கிறார் .

சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றில் யார்

எந்த குளறுபடிகளை மேற்கொள்ள நினைத் தாலும் அதற்கிடமளியாது 121 என்ற எமது பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம். மக்கள் ஆணையை மீறி செயற்படும் ஜனாதிபதி உயர் நீதிமன் றுக்கு மட்டுமல்ல, மக்கள் நீதிமன்றுக்கும் பதில் கூற வேண்டிவரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அரசியலமைப்பை மீறி பிரதமரொருவரை நியமித்துள்ள ஜனாதிபதி பாராளுமன்றை கலைக்க நீதிமன்றை நாடுவது மீண்டும் ஒருமுறை பாராளுமன்றையும் அரசியலமைப்பையும் மீறி சட்டத்துக்கு முரணாக செயற்பட எத்தனிப்பதை காட்டுகிறது. பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக நாம் ஆட்சிக்கு வருகையில் அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட அனைவருக்கும் தண்டனைகள் உண்டு எனவும் அவர் எச்சரித்தார்.

 ஐ.தே.க.வினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. ஒரு முறை பாராளுமன்றை அவமதித்து அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்ட ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றை கலைக்க நினைப்பது அவரை தொடர் தவறுகளுக்குள்ளாக்குகின்றது.

 எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றில் யார் எந்த குளறுபடிகளை மேற்கொள்ள நினைத்தாலும் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 121 என்ற பொரும்பான்மையில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது காசு கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். இந்த காசு கொடுக்கும் நாடகத்திற்கு அப்பால் எமக்கு 121 பேர் உள்ளனர். இப்பெரும்பான்மையை எதிர்வரும் 14 ஆம் திகதி நிரூபிப்போம்.

14 ஆம் திகதி கூடும் பாராளுமன்றம் சபாநாயகரின் அதிகாரத்தின் கீழான பாராளுமன்ற நடவடிக்கைகளிலேயே ஈடுபடும். சபாநாயகர் தனது அதிகாரத்தின் கீழ் ஜனாநாயகத்தை நிலைநாட்ட நடுநிலை வகிப்பார். அவ்வாறான பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவது சட்ட விதிமுறைகளை மீறும் செயலாகும்.

இதனை ஜனாதிபதியும் உணர்ந்து செயற்பாடுவார். மக்களாணையை எட்டி உதைத்தவர்களுக்கு எதிராகவும் எமது ஆட்சியில் தண்டனைகள் உண்டு என்பதையும் கூறிக்கொள்கிறோம் என்றார்.

இப்பேரணியில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிடுகையில்,

நாட்டில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து தெரியாது, பத்திரிகையிலேயே பார்த்தேன் என கூறும் ஜனாதிபதி நாட்டுக்கு தேவையில்லை மக்களாணையை எட்டி உதைத்து கொலை, கொள்ளை மற்றும் ஊழல் காரர்களுடன் கைக்கோர்த்தவர் ஜனாதிபதி பதவிக்கும் தகுதியற்றவராவார்.

பிரித்தானியாவிடமிருந்து 1948 இல் எமக்கு கிடைத்த சுதந்திரத்தை நிலை நாட்டவே ஜனாதிபதி மைத்திரியை ஆட்சி கதிரையில் அமர வைத்தோம். மக்கள் வரத்தை மறந்து மகிந்த அன்று செயற்பட்டதை போன்றே இவரும் செயற்பட முனைகின்றார். நாம் வழங்கிய அதிகாரத்தை எமக்கு எதிராகவே செயற்படுத்த நினைக்கும் ஜனாதிபதியை தோற்கடித்து பாராளுமன்றில் எமது பெரும்பான்மையை நிரூபிப்போம்.

பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை தொடர்ந்து உறுதி செய்யவே மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம். ஆனால் அவரே இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் செய்துள்ளார். கொலை, கொள்ளை, ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் இன்று மீண்டும் அவர்களுடன் கரம் கோர்த்தமை முறையற்றதாகும்.

மக்களாணையை அவர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. ஜனாதிபதியாக அவரை நியமிக்க அவர் கடமையை விடுத்து வேறு பாதையில் பயணித்துக் கொண்டுள்ளார். ஆனாலும் மக்களுடன் கரம் கோர்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம்.

சட்டத்துக்கு முரணாக பறிக்கப்பட்ட பிரதமர் பதவியை மீண்டும் அரசியலமைப்புக்குட்பட்டு பெற்றுக் கொள்வதோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அக்கதிரையில் அமரவைத்தே நாம் போராட்டத்தை நிறைவு செய்வோம் என்றார்.
14 ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றியே தீருவோம். மங்கள சூளுரை. 14 ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றியே தீருவோம். மங்கள சூளுரை. Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.