அரசாங்கத்திற்கு சார்பாக தற்போது 117 பேர் உள்ளனர். அமைச்சரவை தீர்மான ஊடக சந்திப்பில் தெரிவிப்பு.


பாராளுமன்றத்தில் தற்பொழுது பெரும்பான்மை அரச கட்சி கொண்டிருப்பதாகவும்
அதன் எண்ணிக்கை117 ஆகும் என்றும் அமைச்சரும் ஊடகப்பேச்சளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகத் தெரிவித்திருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் மற்றுமொரு ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர். D C
அரசாங்கத்திற்கு சார்பாக தற்போது 117 பேர் உள்ளனர். அமைச்சரவை தீர்மான ஊடக சந்திப்பில் தெரிவிப்பு. அரசாங்கத்திற்கு சார்பாக தற்போது 117 பேர் உள்ளனர். அமைச்சரவை தீர்மான ஊடக சந்திப்பில் தெரிவிப்பு. Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.