உடைந்து விழும் அபாயகர நிலையில் மூதூர் அரபா நகர் பாலம்.


மூதூரில் பெய்து வரும் அடைமழை காரணமாக மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மூதூரின் அரபா
நகரை மூதூரோடு இணைக்கும் பாலம் அதன் இரு மருங்குகளும் ஆபத்தான நிலையில் உள்ளது.

குளத்தில் அடைத்திருந்த சல்மீனியா தாவரத்தின் தடங்களால் பிரதான வடிகானாகிய இந்த பாலத்தின் கீழ்ப்பகுதி ஒட்டு மொத்த நீரோட்டத்தையும் தடுத்து. இதன் விளைவாக தேக்கமடைந்த நீர் ஊர்பகுதிகளுக்குள் வடிந்தோட ஆரம்பித்துள்ளது.

இந்த பாலத்தில் அடைந்திருக்கு சல்மீனியாவை மழைக்காலத்திற்கு முன்னர் அகற்றுமாறு பலமுறை அரபாநகர் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படாததால் ஒட்டு மொத்த ஊரோடு பயிர்நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இனிவரும் காலங்களிலாவது இந்த பாலத்தின் பகுதியை பராமரிப்பது பற்றி மூதூர் பிரதேச சபை, மூதூர் பிரதேச செயலகம், நீர்ப்பாசண திணைக்களம் என்பன கவனத்தில் கொள்ள வேண்டும் என அரபா நகர் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதனூடாக பார ஊர்திகள் எதுவும் செல்லமுடியாதுள்ள நிலை தோன்றியுள்ளதோடு. பாரஊர்திகள் செல்ல பொலிசாரும் அனுமதி மறுத்துள்ளனர்.

-அட்டாளைச்சேனை அஸ்லம் -
உடைந்து விழும் அபாயகர நிலையில் மூதூர் அரபா நகர் பாலம்.  உடைந்து விழும் அபாயகர நிலையில் மூதூர் அரபா நகர் பாலம். Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.