திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழை. 1022 குடும்பங்களை சேர்ந்த 3790 பேர்கள் பாதிப்பு.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை மாவட்டத்தில் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா, மூதூர், சேரவில , கந்தளாய் உட்பட வெள்ள அனர்த்தங்களை எதிர் நோக்கியும் உள்ளது.

சேரவிலை, கிண்ணியா, மூதூர்,வெருகல் பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 1022 குடும்பங்களை சேர்ந்த 3790 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அகதி முகாம்களில் தங்கியிருந்து இடம் பெயரவில்லை எனவும் எந்த வித முகாமும் இல்லை எனவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாகவும் எந் நேரத்திலும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார்.

அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் இன்று (07) தொடர்பு கொண்டு வினவியே போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வடிகான்களை சுத்தப்படுத்தும் பணிகளிலும் பெகோ இயந்திரங்களைக் கொண்டும் நீர் வடிந்தோடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் 106.0  மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழை. 1022 குடும்பங்களை சேர்ந்த 3790 பேர்கள் பாதிப்பு. திருகோணமலை மாவட்டத்தில் கடும்  மழை.  1022 குடும்பங்களை சேர்ந்த 3790 பேர்கள் பாதிப்பு. Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.