யாப்பை மதிக்காது மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை காட்டு மிராண்டி யுகத்தில் தள்ளவேண்டாம்.


குறுகிய அர­சியல் நோக்­கத்­திற்­காக நாட்டின் யாப்­புக்கு மதிப்­ப­ளிக்­காது, ஜன­நா­ய­கத்­திற்கு இட­ம­ளிக்­காது,
பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டும்­படி பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களால் விடுக்­கப்­படும் கோரிக்­கைக்கு செவி­ம­டுக்­காமை போன்ற விட­யங்­களை நான் நேர்­மை­யா­ன­வை­யாகக் காண்­ப­தில்­லை­யென தேசிய ஊடக மத்­திய நிலைய தலைவர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரி­வித்­துள்ளார்.

அதன்­போது அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது;

ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர் ஆகி­யோ­ரிடம் நாட்டின் ஜன­நா­ய­கத்தைப் பாது­காக்­கும்­ப­டியும், அர­சியல் யாப்பை மதிக்­காது நாட்டைத் தவ­றாக வழி­ந­டத்தி காட்­டு­மி­ராண்டி யுகத்­துக்கு நாட்டைத் தள்­ள­வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்­கின்றேன்.

தேசிய ஊடக மத்திய நிலையத்திற்கு சேறு பூசும் வகை­யி­லான அபாண்டப் பழி­களைச் சுமத்தி பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வதன் மூலம் இங்கு பணி­யாற்றும் சகல ஊழி­யர்­க­ளி­னதும் எதிர்­கால நலன்கள் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.மக்கள் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டும்­படி விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை  இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்டு, பாரா­ளு­மன்­றத்தை அகௌ­ர­வப்­ப­டுத்­து­வது நல்­ல­தல்ல. இவர்கள் குறிப்­பி­டு­வது போன்று எத்­த­கைய முறை­கே­டு­களும் அங்கு நிக­ழ­வில்லை. இதனை என்னால் உறு­தி­ப­டக்­கூற முடியும். அவ்­வா­றுள்­ள­தெனின் தக்க ஆதாரங்களை முன்­வைக்­கலாம். எந்த பரி­சீ­ல­னைக்கும் நாம் முன்­வரத் தயா­ராவே உள்ளோம். எந்த நீதி­மன்­றத்­திலும் முகம் கொடுக்­கவும் பின்­வாங்க மாட்டோம். எனவே, சரி­யான முறையில் கார­ணி­களைக் கண்­ட­றி­யாது நாட்டின் சம்­பி­ர­தாய அர­சி­யலில் இடம்­பெற்ற நிகழ்­வுகளை முன்வைத்து விரும்­பத்­த­காத விட­யங்­களை எழுப்பிக் கொண்­டி­ருப்­பது முறை­யல்ல.

உலகில் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள நாடு­க­ளான ஜப்பான், இந்­தியா, சவூதி அரே­பியா மற்றும் மேற்­கு­லக நாடு­களில் ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள் உள்­ளன. அங்­கெல்லாம் பணிகள் சிறப்­பாக நடை­பெ­று­கின்­றன.

அதேபோன்றே இங்கு நிரு­வாக சபையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பிர­தி­நி­தி­யாக தர்­ம­சிறி ஏக்­க­நா­யக்க கட­மை­யாற்­று­கிறார். பிர­த­மரின் பிர­தி­நி­தி­யாக சமன் அதா­வுட செய்திப் பணிப்­பாளராகவும் மற்றும் மேலும் மூன்று பணிப்­பா­ளர்­களும் கட­மையில் உள்­ளனர். அத்­துடன் இலத்­தி­ர­னியல் ஊடகப் பிரிவில் மஹிந்த ரூப­சிங்­கவும் அச்சு ஊடகப் பிரிவில் சிசில் விஜே­ரத்ன, சட்­டத்­த­ரணி ஜகத் லிய­னா­ரச்சி ஆகி­யோ­ருடன் 30 பேர் செயற்­பாட்டு சபையில் உள்­ளனர். மேற்­படி சேறு­பூசும் நட­வ­டிக்­கையால் மேற்­கண்ட அதி­கா­ரி­களின் பணி­களும் கொச்­சைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இதன் மூலம் இந்­நாட்டு ஊட­கங்கள் செயற்­படும் முறைமை தொடர்­பாக கண்­கா­ணித்தல், அது தொடர்­பான கார­ணி­களை மீளாய்வு செய்தல் என்­பன இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பி­டப்­படும் விட­யங்கள் தொடர்­பாக இந்­நாட்டில் மட்­டு­மின்றி சர்­வ­தேச ஊட­கங்கள் தொடர்­பா­கவும் நாம் கார­ணி­களை மீளாய்வு செய்தே வருகின்றோம். அவை இலங்­கைக்குப் பொருத்­த­மாக அமை­யக்­கூ­டிய வகையில் கார­ணி­கள் கண்­ட­றி­யப்­படுகின்றன. ஆய்­வு­களும் மேற்­கொள்­ளப்­படுகின்றன. இவை ஆழ­மாகக் கையா­ளப்படவும் செய்கின்றன.

இக்­கா­ர­ணிகள் ஜனா­தி­ப­திக்கும் பிர­தமர் மற்றும் உரிய அமைச்­சர்­க­ளுக்கும் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இவைதான் எமது ஊடக நிலை­யத்தின் பணி­க­ளாக உள்­ளன.

இத்­த­கைய பணி­களில் ஈடு­படும் நிலை­யத்­திற்கும் அங்கு பணி­களில் கணி­ச­மான பங்­க­ளிப்பு  செய்யும் செயற்­பாட்டுச் சபைக்கும் பாரிய நிந்­த­னை­யையே விளை­வித்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு அவ­மா­னத்­திற்­குள்­ளாக்­காது இரு­பக்க விளை­வு­க­ளை உரியவகையில்  கண்­ட­றிந்து தீர்­மா­னத்­திற்கு வரு­வதே நல்­லது.

கட்சி அர­சி­ய­லுக்கு மதிப்­ப­ளித்து இந்­நாட்டில் காட்­டுச்­சட்டம் அரங்­கேற இட­ம­ளிப்­பது நல்­ல­தல்ல. தவ­றாக வழி நடத்­தப்­ப­டு­வதும் உகந்­த­தல்ல. 1930 ஆம் ஆண்­டு­களில் இருந்து ஜன­நா­ய­கத்தை அனு­ப­வித்த நாடு இது. எமது நாடு யுத்தம், இளைஞர் கிளர்ச்சிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறது. இந்நிலையிலும் எமது நாட்டு மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்நின்று உழைத்திருக்கிறார்கள். அதனால் தயவு செய்து ஜனநாயகத்தைப் பேண இடமளித்து யாப்புக்கு உரிய கௌரவம் வழங்க முன் வர வேண்டும்.

ஜனநாயக நாடொன்றில் அரசியல்வாதிகள் விலை போவது தொடர்பாக தவறான வழிகாட்டல் வழங்கப்படுவதும் நல்லதல்ல. இது தொடர்பாக சகல அரசியல் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று கூறினார்.
-Vidivelli (ஏ.எல்.எம். சத்தார்)

யாப்பை மதிக்காது மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை காட்டு மிராண்டி யுகத்தில் தள்ளவேண்டாம். யாப்பை மதிக்காது மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை காட்டு மிராண்டி யுகத்தில் தள்ளவேண்டாம். Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5