(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி


-மொஹொமட்  ஆஸிக்)​-
(மாத்தளை) உக்குவளை பிரதேச வீட்டில்  ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக்
கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 வயதுடைய பெண்ணின்  மரணம் சம்பந்தமாக சந்தேகம்  இருப்பதாக அப் பெண்ணின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இன்று 21 ம் திகதி அவரது ஜனாசா மீண்டும் தோண்டி எடுக்க்ப்பட்டது.


கடந்த  செப்டம்பர் மாதம் 28 ம் திகதி ​இம் மரணம் ஏற்பட்டுள்ளதுடன் உயிரழந்த பெண்ணின் உறவினர்களினால் அக்குறணை பங்கொல்லாமட முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இருந்த போதும் இவரது மரணம் சந்தேகத்துக்குறியது என்று உறவினர்கள் பொலீஸாருக்கு செய்த முறைப்பாட்டை  அடுத்து பொலீஸார் மாத்தளை நீதவானிடம் உத்தரவு பெற்றுள்ளதுடன் ,  ஜனாசா கண்டி  மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் கண்டி நீதி மன்றத்தின்  உத்தரவுக்கு அமைய இன்று 21 ம் திகதி காலை கண்டி மேலதிக நீதவான் எம்.எச். பரீக்தீன் அவர்கள் முன்னிலையில் ஜனாசா மீண்டும்  எடுக்கப்பட்டது.


, இப்  பெண் 17 வருடங்களுக்கு முன் திருமனம் செய்துகொண்டுள்ளதுட்ள சுமார் 10 வருடங்களாக வெளி நாட்டில் வசித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சித்தி சாயிரா  மொஹமட் சவாஹிர் என்ற 38 வயதுடைய குடும்​ப பெண் ஆவார்.


இம் மரணம்தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை ஒன்றை  கண்டி சட்டவைத்திய அதிகாரியினால்மேற்கொள்ள உள்ளதாக பொலீஸார்தெரிவித்தனர்.


மாத்தளை பொலீஸார்மேலதிக  விசாரணைணகளை நடாத்துகின்றனர்.





2018  10  21 ஆஸிக்
(படங்கள்) நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி (படங்கள்)  நல்லடக்கம் செய்யப்பட்ட சித்தி சாயிராவின் ( 38) ஜனாஸா. உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து தற்போது தோண்டி எடுக்கப்படுகிறது. #கண்டி Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.