இனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்..


( ஐ. ஏ. காதிர் கான் )
 ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை,  சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு, 
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.                       

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சேவையின் தரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே,  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


   ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் ஆடையில் சேவையில் ஈடுபடும்போது, அநேகமான குற்றச் செயல்கள் அடையாளம் காணப்படுவதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


   முப்பது  வருடங்களுக்கும் மேலாக,  பல்வேறு காரணங்களினால் பதவியுயர்வுகளைப் பெறாத ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் 284 பேருக்கு, சார்ஜன்களாக பதவியுயர்வுகள்  வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டபோதே,  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு  தெரிவித்துள்ளார்.
இனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்.. இனிமேல் ரயிலில் உங்கள் அருகில் இருப்பவர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கலாம்.. Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.