பொதுஜன முஸ்லிம் முன்னணின் சக்தியைப் பலப்படுத்த வேண்டும். இந்தக் கட்சிக்காக கஷ்டப்பட்ட முஸ்லிம்களுக்கே முன்னுரிமை.


பரசூட்டில் தருணம் பார்த்து வந்து இறங்கும் சிறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு இடம்கொடுக்காமல்
ஸ்ரீலங்கா பொதுஜன  முஸ்லிம் முன்னணின் சக்தியைப் பலப்படுத்த வேண்டும். இந்தக் கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள் இருக்க இருக்க கடைசியில் வந்து இரண்டு பக்கமும் தலையைக் காட்டிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிற முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம்.


 இவர்கள் வந்து அவர்களுடைய வேட்பாளர்களை நிறுத்தும்படி கோரிக்கை விடுப்பார்கள். இங்கே கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள் இருப்பார்கள்.


அவர்களை நீக்கிவிட்டு தம் கட்சிக்காரர்களைப் போடும்படி கூறுவார்கள். இப்படியான வேலைகளுக்கும் இனிமேல் இடம்கொடுக்கக் கூடாது. மூன்று வருடங்களாக கட்சியில் கஷ்டப்பட்டவர்களை இல்லாமற் செய்து  விட்டு;   செல்லும் அரசியல் பயணத்தில் நான் செல்லத் தயார் இல்லை. எங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு  செயற்படத் தயார் என்றால் அது பருவாயில்லை. எங்களுடன்  இருப்பவர்களை இல்லாமற் செய்து விட்டு எதுவும் செய்ய முடியாது.


கலகெதரைப் பிரதேசத்தில் புதிய முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான காலம் நேருங்கி விட்டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான கெஹலிய ரம்புக்கல தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன  முஸ்லிம் முன்னணின் கலகெதர மடிகேயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான கெஹெலி ரம்புக்கல இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

திகன சம்பவத்துடன் தொடர்புடையவரை நாலக்க சில்வாவுக்கு  ஒப்படைத்தவன் நான் ஆகும். இது அவருக்குத் தெரியும்.  நான் காலையில் தொலைபேசியில் அந்த நபர் எங்கே என்று நாலக்க சில்வாவுடன் தொடர்பு கொண்டு கேட்டேன்.  அவர் தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு தற்போது அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்.  இதனுடன் சம்பந்தப்பட்டவர் என்கின்ற சாட்சி இருக்கிறது. ஆனால் டெலி நியுஸ் பத்திரிகையில் 21 ஆம் திகதி அரலிய சமன். இவர் எமது பிரதேச சபை உறுப்பினர். திகன பள்ளியினைத் தாக்குதல் சம்பத்துடன் தொடர்பு உடையவர். அவர் கைது செய்யப்பட்டதாக தலைப்புச் செய்தில் வருகிறது. இது அமைச்சர் ராஜித தெரிவித்ததாக வெளிவந்திருந்தது.  ஆனால் அவர் சொல்லும் போது அவர் வீட்டில் இருந்தார். இது பற்றி நான் அமைச்சர் ராஜிதவிடம் கேட்ட போது பொலிஸ் அவ்வாறு கூறியதாக என்னிடம் தெரிவித்தார். 26 ஆம் திகதி தான் சமன் அரலியை நான் சென்று பொலிஸில் ஒப்படைத்தேன். அவர்தான் அங்கு இருந்த மௌலவி பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து பள்ளியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்.


இது வந்து பொலிஸ் மீதும்  கூட்டு எதிர் அணியினர் மீதும், தப்பு அபிப்பிராயங்களையும் வைராக்கியங்களை உருவாக்கும்  சம்பவங்களாகும்.  மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீ மூட்டுகின்ற சந்தர்ப்பத்தில் எமது பிரதேச உறுப்பினர் காமினி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக பத்திரிகைச் செய்து வெளிவருகிறது. மெனிக்கின்ன பள்ளி தீ மூட்டப்பட வில்லை. இது கூட வைராக்கியத்தை உருவாக்குகிறது. இது பற்றி நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். இது பற்றி உங்களுக்குக் கூட சந்தேகம் வரும்.
நான் வெளிவகார அமைச்சராக இருந்த போது வெளிநாடுகளுக்கு தூதுவராக அனுப்பியவர்கள் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் ஆவர். அவர்களை நான் அனுப்பியது முஸ்லிம் என்ற காரணத்தினால் அல்ல. அவர்கள் என்னுடைய நண்பர்கள். பாரூக், நிஸ்தார். உள்ளிட்ட  ஆறுபேர்களை அனுப்பியுள்ளேன்.

நான் படிக்கும் போது ஒரு பக்கமும் முஸ்லிம் நண்பரும் மறுபக்கம் கிறிஸ்தவ நண்பரும் இருப்பார்கள். எங்களிடம் முஸ்லிமோ கிறிஸ்தவர்களோ ஒன்ற பிரிவினை இல்லை.  நண்பர்களாக இருந்து சமூகத்தை கட்டி எழுப்பினோம். திறந்த மனதுடன் பழகுவோம். அதே போன்று முஸ்லிம்களும் திறந்த மனதுடன் பழகுவார்கள்.


மஹிந்த ராஜபக்ஷ என்றால் யார் கோட்டாபே ராஜபக்ஷ என்றால் யார் என்பதை நாங்கள் தேடிப் பார்க்க வேண்டும்.  அமைச்சர் ராஜிதவின் செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி நீங்கள் அறிந்து இருப்பீhகள். சிங்கள பௌத்த வலவேக்க என்ற அமைப்பை இயக்குபவர்கள் மைத்திரி ,சம்பிக்க, , ரத்ன ஹிமி தேரர், ஆகியவர்கள்.


ஜனாதிபதி  தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்க வேண்டும்.  அது மூன்று மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இது காலம் தாழ்த்திப் போட வேண்;டிய வேலை இல்லை. என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன  முஸ்லிம் முன்னணின் பொதுச் செயலாளரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான அப்துல் சத்தார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உரை இங்கு பலர் உரை நிகழ்த்தினர்

இக்பால் அலி
09-10-2018
பொதுஜன முஸ்லிம் முன்னணின் சக்தியைப் பலப்படுத்த வேண்டும். இந்தக் கட்சிக்காக கஷ்டப்பட்ட முஸ்லிம்களுக்கே முன்னுரிமை. பொதுஜன முஸ்லிம் முன்னணின் சக்தியைப் பலப்படுத்த வேண்டும். இந்தக் கட்சிக்காக கஷ்டப்பட்ட முஸ்லிம்களுக்கே முன்னுரிமை. Reviewed by Madawala News on October 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.