கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ் நியமனம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன்
முஹம்மட் நௌபீஸ்  கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுனரின் செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டது.


இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த இவர்  பதவி உயர்வு பெற்று இந்த நியமனத்தை ஆளுனர் வழங்கியுள்ளார்.


முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர், கிராமிய கைத்தொழில் உற்பத்தி திருகோணமலை  மாவட்ட பணிப்பாளர் , கிண்ணியா நகர சபையின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நூர்தீன் மற்றும் எம்.டி.அஸீஸா ஆகியோரின் புதல்வருமாவார்.


நியமனம் வழங்களின் போது கிழக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன போன்றோர்களும் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ் நியமனம். கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ் நியமனம். Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5