(வீடியோ & படங்கள்) திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பாரிய விமான கட்டுப்பாட்டு டவருடன், சுவருடன் மோதியது.


திருச்சியில் இருந்து டுபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் விமான நிலையத்தின் முடிவில்
உள்ள பாரிய விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம் அமைந்துள்ள சுவரின்  மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்தத ஏர்இந்தியா விமானத்தில் 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

விமானம் திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்மீது மோதி நிலைதடுமாறி சுற்று சுவரில் இடித்துள்ளது.

ஆனால் விமானத்தை மீண்டும் திருச்சியில் தரையிறக்க முடியாத சூழ்நிலை நிலவி உள்ளது. இதனால் விமானம் மும்பை நோக்கி திருப்பப்பட்டு மும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதனால் பெரிய சேதம், பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் வேறு விமானம் மூலம் டுபாய்க்கு அனுப்பப்பட உள்ளார்கள்.

எனினும் குறித்த ஏர்இந்தியா விமானத்தில் இலங்கையர்களும் உள்ளார்களா என்ற விடயம் இதுவரை வெளிவராத நிலையில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(வீடியோ & படங்கள்) திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பாரிய விமான கட்டுப்பாட்டு டவருடன், சுவருடன் மோதியது. (வீடியோ & படங்கள்)  திருச்சியில் இருந்து  130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பாரிய விமான கட்டுப்பாட்டு டவருடன், சுவருடன்  மோதியது. Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5