எரிபொருள் சூத்திரம் என்ன? இது நாட்டு ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ, நிதியமைச்சருக்கு கூட தெரியாது .


இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் மற்றைய தரப்பிலிருந்து இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தீர்மானிக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றங்கள் குறித்து எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது எவரிற்கும் தெரியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்வதற்கான சூத்திரம் என்னவென்பது குறித்து ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாது, என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி நிதியமைச்சர் கூட தனக்கு தெரியாது  என தெரிவித்துள்ளார் ஆகவே இதனை தீர்மானிப்பது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எரிபொருள் சூத்திரம் என்ன? இது நாட்டு ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ, நிதியமைச்சருக்கு கூட தெரியாது . எரிபொருள் சூத்திரம் என்ன? இது நாட்டு ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ,  நிதியமைச்சருக்கு  கூட தெரியாது . Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.