சமகால முஸ்லிம் வர்த்தக சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதற்கான அணுகுமுறைகள் எங்கே?

முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் தொன்றுதொட்டு வியாபார சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு
வருகின்றமை ஏற்றுக்கொள்ளபட்ட விடயமாகும்.

 அத்துடன், இச்சமூகம் வர்த்தகத்தில் நன்கு தேர்ச்சிமிக்க முன்னணி சமூகமாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக இந்நிலை பல்வேறு காரணங்களால் மாற்றம் கண்டு வருவது துரதிஸ்டவசமானது மட்டுமன்றி கவலைக்குரியதுமாகும். இக்காரணங்களுள் இரு பிரதான காரணங்களை உற்றுநோக்குவது அவசியமாகும்.  


முஸ்லிம்களிடமிருந்து வர்த்தகத் துறையைக் கைப்பற்றவும் பறித்தெடுப்பதற்கும் திட்டமிட்ட சதிகள் மற்றும் தந்திரோபாயங்கள்  முஸ்லிம் எதிர்ப்புச் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை முதற் காரணமாகும்.

முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று முஸ்லிம்களின் வர்த்தகத்தை வீழ்த்தி தம்வசப்படுத்திக் கொள்வதாகும் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

ஆனால், இது தொடர்பான விழிப்புணர்வற்ற  சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து வருவது மிகவும் கவலைக்குரியதாகும்.


முஸ்லிம் வர்த்தகங்களுக்கெதிரான பகிரங்க நவடிக்கைகள் நீரில் மேல் மிதக்கும் பனிக்கட்டி போன்றதாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் அரசியல், பொருளாதார, உயர்மட்ட சமூக அமைப்புக்களின் பங்களிப்புடன் வகுக்கப்பட்ட கொள்கை அடிப்படையிலான நீண்டகாலத் திட்டங்களும் தந்திரோபாயங்களும்  செயற்படுத்தப்பட்டு வருகின்றன.


இது தொடர்பாக முஸ்லிம் சமூகம் வெறும் வாய்ப்பேச்சில் மட்டும் செயற்படுகின்றது. ஆனால், செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை காண முடிவதில்லை.


இதில் இரண்டாவது காரணம், முஸ்லிம் சமூகம் வர்த்தகத்துறையில் நவீன மாற்றங்களை உள்வாங்காது  அசிரத்தையுடன் செயற்படுவதாகும். அத்துடன்,  வரத்தகத்துறையை மரபு ரீதியில் மட்டும்  முன்னெடுக்க முற்படுவது நாம் கூறிய முதற்காரணத்திற்கு கைகொடுப்பதாகவே அமைகின்றது.
இக்காரணங்கள் இரண்டும் வர்த்தகத்துறை பொதுவாக எதிர்நோக்கும் சவால்களுக்கு மேலதிகமான சவால்களாகும். பொதுவாக வர்த்தகத்துறையைப் பாதிக்கும் பொருளாதார, அரசியல், சமூக, தொழிநுட்ப மாற்றங்கள்;  சமகாலத்தில் பாரிய சவால்களாகத் தோன்றியுள்;ள நிலையில் இம்மேலதிக சவால்கள் பற்றி நாம் ஆழமாக  சிந்தித்து செயற்படுவது அவசியம்.


அதேசமயத்தில், தற்காலத்தில் மாறிவரும் வணிகசூழலில் அதிகளவு வணிக வாய்ப்புக்களும் உருவாகி வருவதை சரியாக இனங்கண்டு பயன்படுத்திக் கொள்வது புத்திசாதுர்யமானதாகும்.


முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்த  சமூகமாக இந்நாட்டில் திகழ்வதற்கு  சமூகத்தின் வர்த்தகத்துறை பலம் பெற வேண்டியது அத்தியாவசியமாகும். இதன் அடிப்படையில் சமூகம் தனது வியாபார முறைமைகளை குறுங்கால, நீண்டகாலத் திட்டங்களின் அடிப்படையில் முன்னெடுப்பது இன்றியமையாதது.


இதற்குப் பக்கபலமாக வணிகத்துறை ஆலோசனைகள், அறிவுரைகள்  வழங்கும் நிறுவனங்கள் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் பிரபல்யமிக்க நிறுவனமாக கண்டி நகரில்  Kings Street  இயங்கி வரும் Benchmark Consultants (Pvt)  ஐக் இங்கு குறிப்பிடலாம்.

இது தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் :

M. Fawas Farook
MBA (PIM – Sri .J.) B. Com, CA (Part), MAAT, Executive Coach, Adv. Dip in NLP
Lead Consultant/Coach/Trainer/Senior Lecturer

Benchmark Consultants (Pvt.) Ltd.
59/2/1, Kings Street, Kandy.
Telephone +94 77 22 88 525, +94 812 205 408
Email : fawasfarook@benchmarkconsultants.lk
சமகால முஸ்லிம் வர்த்தக சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதற்கான அணுகுமுறைகள் எங்கே? சமகால முஸ்லிம் வர்த்தக சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதற்கான அணுகுமுறைகள் எங்கே? Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5