சுதந்திரத்தின் பின் 70 வருட காலமாக நல்லிணத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெறுமளவுக்கு தோல்வியே...


-ஜே.எம்.ஹபீஸ்-
சுதந்திரத்தின் பின் 70 வருட காலமாக நல்லிணத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
பெறுமளவுக்கு தோல்வியே கண்டு வந்துள்ளதாக முன்னாள் மத்தியமாகாண சபை அங்கத்தவரும், 'தெசத்திய' வெளியிடுக்குழு அங்கத்தவரும் இடது சாரி தொழிற்பாட்டாளருமான ராஜா உஸ்வெட்டபெய்யாவ தெரிவித்தார்.(9.10.2018)


தகவல் திணைக்களத்தால் கண்டி டெவோன் ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழப்புணர்வு செயலமர்வு ஒன்றில் அவர் இதனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-


இவங்கை வரலாற்றில் சுதந்திரத்தின் பின் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், ஜே.ஆர். ராஜிவ் ஒப்பந்தம் உற்பட பல ஒப்பந்தக்கள் மேற்கொள்ளபபட்டன. அரசியல் அமைப்பு ரிதியாக மாவட்ட சபை, மாகாண சபை, சமஷ்டி என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் 1980 களில் தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்து என்று ஏற்பாடு முன் வைக்கப்பட்டது. இன்று அரச கரும மொழி தொடர்பான அக்கொள்கை அமுல் படுத்தப்படுவதாகக் கூறினாலும் எதிர் பார்த்த விளைவுகள் இல்லை.


நல்லிணக்கத்திற்காக பல்வேறு ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1977ல்  உருவாக்கப்பட்ட சன்சோனி குழுவில் பல அறிஞர்கள் சாட்சியம் அளித்தனர். அதனை அமுல் படுத்த முன் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. அது புதுவகையான சிவில் யுத்தமாகியது.  இந்தியப்படைகள் இங்கு வந்து இறங்கும் அளவுக்கு நிலைமைகள் இருந்தன. பின்னர் 1990களில் சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய அரசியல் சீர் திருத்தங்கள் எதுவம் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. 2002 ல் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மூலம் பாராளு மன்றிலே கொழுத்தப்பட்டது.


மாகாண சபைகள் கொண்டு வந்தால் நாடு துண்டாடப்படும். ஒரு மாகாண எல்லையிலிருந்து மற்ற மாகாண எல்லைக்குச் செல்ல கடவுச்சீட்டு தேவைப்படும் என்றெல்லாம் பிரசாரம் செய்தார்கள். ஆனால் அது எதுவும் இன்று தேவைப்பட வில்லை. இவை அனைத்தையும் விட யுத்தம் மூலம் தீர்வு காண முடியாது என்ற சர்வதேச கோட்பாடுகளுக்கு அப்பால் 30 வருடம் யுத்தம் செய்தோம். அந்த யுத்தம் நிறைவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் நாட்டில் நல்லிணக்கம் என்ற ஒன்று ஏற்பட்டதாகத் தெரிய வில்லை.


எனவே சுதந்திரத்தின் பின் நாம் நல்லிணக்கத்திற்காக எடுத்த முயற்சிகள்; பெருமளவு தோல்வி கண்டு வந்துள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.
ஒரு முறை கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்லா  குறிப்பிட்டார் 'ஒரு மொழி இரண்டு நாடு, இரண்டு மொழி ஒரு நாடு' என்று. அதுதான் இன்றும் நடந்து கொண்டுள்ளது.


இவை அனைத்தையும் விட 2015ம் ஆண்டு நல்லாட்சி என்று சொல்லிக் கொள்ளும் ஒன்றைக் கொண்டு வந்தோம். அதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் சில சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழு, பொலீஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு என்று 11 ஆணைக்குPக்கள் உள்ளன. கம்பெரலிய, என்டபிரைஸ் ஸ்ரீலங்கா, கிரம சக்தி போன்ற சில நடவடிக்கைகள் முன் எடுக்கப்படகிறது.
சர்சதேச நாடுகள் சிலவற்றின் முன்மாதிரியைச் சற்று பார்ப்போமானால் நெல்சன் மண்டேலா மேற்கொண்ட முயற்சிகள் போன்றவற்றை அவதானிக்கலாம். உகண்டாவில் இரு பெரும் இனக்குழுககளுக்கிடையிலான மோதல் இருந்தது. அது தடுத்து நிறுத்ப்பட்டுள்ளது. அங்கு ஒரு மொழியே தற்போதுள்ளது.


அதே போல் நேபாளத்திரும் இன்று சமயக் குழுக்களின் போரட்டம் இன்றி அமைதி ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் பிரச்சினைகள் இனம் காணப்பட்டு அரசியல் தீர்வுகள் மூலம் அவை தீர்கப்பட்டுள்ளன. இவை போன்றவற்றை நாம் முன் மாதரியாகக் கொள்ள வேண்டும் என்றார்.


இவ்வைபவத்தில் கண்டி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் எஸ். கனேபுர தெரிவித்ததாவது-


 சட்டவாக்கம், நீதி, நிர்வாகம் என்ற முத்துறை அதிகாரம் போல் நான்காவது அதிகாரம் பொருந்திய ஒரு துறையாக இன்று ஊடகம் எடுத்துக்காட்டப்படுகிறது. எனவே நான்காவது பெறிய சக்தியை நல்ல விடயங்களுக்கு முறையாகப் பயன் படுத்த வேண்டும் என்றார்.
தகவல் தினைக்களப் பணிப்பாளர் (செய்தி) திருமதி நில்மினி பிரியங்கா குமாரகே உற்பட மற்றும் பலர் இதில் உரையாற்றினர்.
சுதந்திரத்தின் பின் 70 வருட காலமாக நல்லிணத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெறுமளவுக்கு தோல்வியே... சுதந்திரத்தின் பின் 70 வருட காலமாக நல்லிணத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெறுமளவுக்கு தோல்வியே... Reviewed by Madawala News on October 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.