இலங்கை காட்டினுள் நடைபெற்ற பாரிய ஆபாச களியாட்ட நிகழ்வு .. ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் - யுவதிகள் போலீசாரால் வளைப்பு.


இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால்
நிறுத்தப்பட்டுள்ளது.

சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக ஆபாச களியாட்ட  விருந்து இடம்பெற்றுள்ளதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“டீப் ஜன்கல் பெஸ்டிவல் - ஸ்ரீலங்கா” என இந்த விருந்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்கும் அனுமதி சீட்டு இணையம் ஊடாகவும் விருந்தில் நுழையும் வளாகத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

பாரிய காடு ஒன்றுக்குள் மிகவும் நுட்பமான வகையில் அனைத்து வசதிகளுடனும் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது.

குறித்த விருந்தில் கலந்து கொள்ளும் நபர் ஒருவருக்கு, நாளைக்கு முப்பதாயிரம் ரூபா என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 90 ஆயிரம் ரூபா அறிவிடப்பட்டுள்ளது.

விருந்திற்கு போதுமான நீர் வசதி இருக்கவில்லை. குடிநீர் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும், நீர்  பந்தங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விருந்திற்கு வந்தவர்கள் தங்குவதற்காக சில குடிசைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து தொடர்பில் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனங்களை அவதானித்து, அதனை பின் தொடர்ந்த பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளனர்.

அதிகாலை 1 மணியளவில் விருந்து நடைபெற்ற பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அங்கு ஆயிரத்திற்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு யுவதிகள் மற்றும் இளைஞர்கள்  ஆபாச நிலையில்  இருந்துள்ளனர்.

அத்துடன் 3000க்கும் அதிகமான மதுபான போத்தல் மற்றும் 1500 பியர் டின்களும் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளும் அதிகளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற பாரிய ஆபாச களியாட்ட நிகழ்வாக இதனை கருத முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை காட்டினுள் நடைபெற்ற பாரிய ஆபாச களியாட்ட நிகழ்வு .. ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் - யுவதிகள் போலீசாரால் வளைப்பு. இலங்கை காட்டினுள் நடைபெற்ற பாரிய ஆபாச களியாட்ட நிகழ்வு .. ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் - யுவதிகள் போலீசாரால் வளைப்பு. Reviewed by Madawala News on September 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.