இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி



ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்  இன்றைய போட்டியில் இலங்கை அணியை 92
ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.

டொஸ்  வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முகமது ஷேசாத், ஜனத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 57 ரன்கள் சேர்த்தது.

முதல் விக்கெட்டாக ஷேசாத் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹ்மத் ஷா களம் இறங்கினார். இவர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜனத் 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ரஹ்மத் ஷா சிறப்பாக விளையாடி 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் அஸ்கர் ஆப்கன் 1 ரன்னில் வெளியேற, ஷாஹிதி 37 ரன்கள் சேர்த்தார். ஷாஹிதி ஆட்டமிழக்கும்போது ஆப்கானிஸ்தான் 44.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின் 32 பந்தில் 46 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 249 எடுத்து ஓல்அவுட் ஆனது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 250 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை  அணி 158 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணிக்காக உபுல் தரங்க அதிக பட்சமாக 36 ரண்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதால்  இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.


இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி Reviewed by Madawala News on September 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.