சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு




இம்முறை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான இலவசக்
கருத்தரங்கு எதிர்வரும் 24.09.2018 (திங்கட்கிழமை) காலை 09.00 மணி முதல்  மாலை 05.00 மணிவரை மருதானை இல: 63, தெமட்டகொட வீதி, கொழும்பு 09 இல் அமைந்துள்ள YMMA கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

பொது அறிவு, பொது உளச்சார்பு மற்றும் மொழித் திறன் முதலானவற்றை உள்ளடக்கிய அதி போட்டிமிக்க நுழைவுத் தேர்வுக்கான இவ் இலவசக் கருத்தரங்கில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி அப்ஆன் காரியப்பர் (SLAS, M.Sc in Agri Economics & B.Sc in Agri Technology & Mgt.), சட்டத்தரணி கமலயோகேஸ்வரன் (Attorney-at-Law)  ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் YMMA இன் அனுசரணையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் விஷேட ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதோடு எதிர்பார்க்கை வினாக்களும் கலந்துரையாடப்படவுள்ளதனால் தமிழ், ஆங்கில மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இன்பாஸ் (0762919029), மஹீஸ்  (0777379914) ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களையும் தங்களின் வரவையும் உறுதிசெய்து கொள்ளுமாறு சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர்  முபாறக் முஅஸ்ஸம் (நளீமி) தெரிவித்துள்ளார்.


Ash-Sheikh Mubarak Muazzam (Naleemi),
President,
Law Students' Muslim Majlis,
Sri Lanka Law College.


சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு Reviewed by Madawala News on September 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.